உக்ரைன் இந்திய மாணவர் கல்விக்கடன் ரத்து பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய கடிதத்திற்கு நிதி இணையமைச்சர் பதில் அளித்துள்ளார்.

உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் கல்விக் கடனை ரத்து செய்யக்கோரி மார்ச் 8ம் தேதியன்று எழுதிய கடிதத்திற்கு, மத்திய நிதி இணை அமைச்சர் டாக்டர் பகவத் கரத் கடந்த மாதம் 25ம் தேதியிட்ட கடிதம் ஒன்றில் பதில் அளித்துள்ளார்.

image

டாக்டர் பகவத் கரத் இதுதொடர்பாக எழுதியுள்ள தனது கடிதத்தில், `வெளியுறவு அமைச்சக கணக்குப்படி 22,500 இந்தியர்கள், பெரும்பாலும் மாணவர்கள், பிப்ரவரி 1, 2022 க்கு பிறகு உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். உக்ரைனில் இருந்து மேலை நாடுகளுக்கு இடம் பெயர்ந்த இந்தியர்களுக்கு தங்குமிடம், மருத்துவம், உணவு உள்ளிட்ட எல்லா உதவிகளையும் அரசு செய்து `ஆபரேசன் கங்கா’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டனர். இன்னும் உக்ரைன் நிலைமைகள் தெளிவாகவில்லை. அங்கு நடந்தேறி வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதோடு, அங்கு நிலைமை சீர் அடைந்தவுடன் எல்லா தாக்கங்களையும் மதிப்பிட்டு, தீர்வுகளுக்கான வழிகளையும் பரிசீலிப்போம்’ என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க… யு.பி.எஸ்.சி. 2022: நாடு முழுவதும் தொடங்கியது குடிமைப்பணிக்கான முதல்நிலை தேர்வுகள்!

மேலும் `இடைக்கால நடவடிக்கையாக, நாடு திரும்பியுள்ள மாணவர்களின் கல்விக் கடன் மீது உக்ரைன் மோதல் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து உரித்தான மட்டங்களில் கலந்தாலோசனை செய்யுமாறு இந்திய வங்கியாளர் கூட்டமைப்பை (I.B.A) அறிவுறுத்தியுள்ளோம்’ என்றும் தெரிவித்துள்ளார்.

image

அமைச்சரின் இந்த பதிலுக்கு நன்றி தெரிவித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், `கடிதத்தின் பதிலில் நம்பிக்கை தரும் வார்த்தைகள் இருந்தாலும், முடிவுகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். உக்ரைன் நிலைமை விரைவில் சீராக வேண்டும் என்று உளமார விரும்பினாலும் அதை கல்விக் கடன் ரத்து குறித்த பிரச்னையோடு இணைக்காமல், ஏற்கெனவே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குகிற முடிவை உடன் எடுக்க வேண்டும்’ என்ற தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.