இந்தியாவின் முதல் மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய திரவ-கண்ணாடி தொலைநோக்கி உத்தராகண்ட் மாநிலத்தின் தேவஸ்தல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. உத்தராகண்டின் இமயமலைத் தொடரில் உள்ள ஒரு மலையின் மேல், வானத்தை கண்காணிக்கும் வகையில் ஒரு வகையான திரவ-கண்ணாடி தொலைநோக்கியை வைத்துள்ளனர்.

பல விண்மீன் திரள்கள் மற்றும் பிற வானியல் நிகழ்வுகளை கண்காணிக்கும் வகையில் இந்த தொலைநோக்கியை வைத்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 2 ஆயிரத்து 450 மீட்டர் உயரத்தில் ஆர்யபட்டா ஆய்வு அறிவியல் கழகத்தின் தேவஸ்தல் கண்காணிப்பு வளாகத்தில் இது அமைந்துள்ளது.

First Liquid Mirror Telescope Of India Commissioned In Uttarakhand Largest  In Asia

இந்தியா, பெல்ஜியம் மற்றும் கனடாவைச் சேர்ந்த வானியலாளர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த கருவியானது ஒளியைச் சேகரித்து குவிப்பதற்கு திரவ பாதரசத்தின் மெல்லிய படலத்தால் ஆன 4 மீட்டர் விட்டம் கொண்ட சுழலும் கண்ணாடியைப் பயன்படுத்துகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.