தனது மனைவியுடன் உடலுறவு கொண்டபின் தனக்கு குறுகியகால ஞாபக மறதி ஏற்பட்டுவிட்டதாக 66 வயது நபர் ஒருவர் மருத்துவமனைக்கு ஓடிய விசித்திர சம்பவம் அயர்லாந்தில் நடந்துள்ளது.

அயர்லாந்து மருத்துவ இதழ் இதுகுறித்த கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த குறுகிய கால ஞாபக மறதிநோயை தற்காலிக உலகளாவிய மறதி( Transient Global Amnesia -TGA)என்று குறிப்பிட்டிருக்கிறது. இது கால்-கை வலிப்பு அல்லது பக்கவாதம் போன்ற பொதுவான நரம்பியல் நோய்களால் ஏற்படவில்லை என்று விளக்கமளித்திருக்கிறது மாயோ க்ளினிக்.

அயர்லாந்தைச் சேர்ந்த அந்த நபர் தனது மனைவியுடன் பாலியல் உடலுறவு கொண்ட 10 நிமிடம் கழித்து தனது செல்போனை எடுத்து பார்த்திருக்கிறார். அப்போது முந்தைய நாள்தான் தனக்கு திருமண நாள் எனவும், அதை தான் மறந்துவிட்டதாகவும் தனது மனைவி மற்றும் மகளிடம் கூறி வருத்தம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதற்கு முந்தைய நாள் மாலைதான் தனது திருமண நாளை விமர்சையாக கொண்டாடி இருக்கிறார். மனைவியும், மகளும் அதுகுறித்து எடுத்துக்கூறியும் அவருக்கு எதுவும் நினைவில் வரவில்லை என்று தெரிகிறது. அப்போதுதான் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்புவரை நடந்த அனைத்தையும் மறந்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. உடனே அவர் பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்.

image

இது ஒரு அரிய வியாதி என்றாலும் 50 மற்றும் 70 வயதுக்கு உட்பட்டவர்களிடையேதான் பெரும்பாலும் காணப்படுகிறது. அதாவது சில நாட்களுக்கு முன்பு நடந்த விஷயங்கள் அனைத்தும் மறந்துபோகும் நிலை. இதைத்தான் TGA என்கின்றனர். இந்த வியாதியாக பாதிக்கப்பட்ட சிலருக்கு ஒருவருடத்திற்கு முன்பு நடந்ததுவரைகூட மறந்துபோகலாம். இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் பெரும்பாலும் சிலமணிநேரங்களிலேயே இழந்த நினைவுகள் திரும்பிவிடும்.

இதே நபர் 2015ஆம் ஆண்டு ஒருமுறை இதே TGA பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதுவும் தனது மனைவியுடன் உடலுறவு கொண்ட சில நிமிடங்களிலேயே நடந்திருக்கிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக சிலமணி நேரங்களிலேயே அப்போது அவருக்கு நினைவுகள் திரும்பிவிட்டது என்கின்றனர் குடும்பத்தினர். மீண்டும் அதே பிரச்னை வந்ததால்தான் அந்த நபர் பதறிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார். இருப்பினும் உடனே அவருக்கு நரம்பியல் பரிசோதனை செய்ததில் அவர் இயல்பாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்தமுறை போலவே இந்தமுறையும் சிலமணிநேரங்களில் அவருக்கு நினைவும் திரும்பிவிட்டது.

image

TGA-வால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு பெயர், வயது, குடும்பம் போன்ற அடிப்படை விவரங்கள் எதுவும் மறப்பதில்லை என்பது ஒரு ஆறுதலான விஷயம் என்கின்றனர் நிபுணர்கள். மேலும் உடல் செயல்பாடுகள், குளிர்ந்த அல்லது சூடான நீரில் மூழ்குதல், மன அழுத்தம், வலி மற்றும் உடலுறவு போன்றவற்றுடன் தொடர்புடையது இந்த குறுகியகால மறதி என்கின்றனர் அவர்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.