தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடிகராக நடித்துள்ள `அரபி’ என்ற கன்னட படத்தின் டீசர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது தள்ளிப்போடப்பட்டிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

கர்நாடகாவை சேந்த 32 வயதான கே.எஸ்.விஸ்வாஸ் என்ற நீச்சல் வீரர், தனது இரு கைகளை இழந்தநிலையிலும், பாரா நீச்சல் போட்டியில் ஏராளமான பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகிறார். இவர் 10 வயதாக இருக்கும்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் வேளாண் துறையில் எழுத்தராக இருந்த இவரது தந்தை சத்தியநாராயண மூர்த்தியுடன், இவர்கள் கட்டிக்கொண்டிருந்த வீட்டில் சிமென்ட் பூசப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறி மின்வயர்களில் விழுந்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் இவரை காப்பாற்ற முயற்சித்தபோது அதில், அவரது தந்தை சத்தியநாராயண மூர்த்தி உயிரிழந்துள்ளார்.

Former-IPS-turned-politician-Tamil-Nadu-BJP-President-Annamalai-plays-a-coach-in-swimmer-KS-Vishwas-biopic

பின்னர் அந்த விபத்தில் இருந்து மீட்கப்பட்ட விஸ்வாஸ், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு மாதங்கள் கோமாவில் இருந்தப் பிறகு, குணமடைந்துள்ளார். ஆனால் அந்த விபத்தில் அவரது இரண்டு கைகளை விஸ்வாஸ் இழந்துள்ளார். தந்தையை இழந்தநிலையில் அவரது குடும்பம் பெங்களூரு சென்றுள்ளது. அங்கு நம்பிக்கை இழக்காமல் பி.காம் பட்டப்படிப்பு முடித்தநிலையில், குங் பூ, நடனம், நீச்சல் உள்ளிட்ட கலைகளை கற்றுக்கொண்டதுடன் சர்வதேச பாரா நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு தன்னம்பிக்கையுடன் சாதனை புரிந்து வருகிறார் விஸ்வாஸ்.

இவரின் கதையால் ஈர்க்கப்பட்ட பிரபல கன்னட திரையுலக இயக்குநர் ராஜ்குமார், விஸ்வாஸின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘அரபி’ (‘Arabbie’) என்ற படத்தை இயக்கி வருகிறார். ஸ்ரீவிஜய ராகவேந்திரா புரடொக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கான அறிவிப்பு கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது. இந்தப் படத்தில் தான் தமிழ்நாடு பாஜக தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, விஸ்வாஸின் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார்.

இதையும் படிங்க… நடிகராக புதிய அவதாரம்.. அண்ணாமலை நடித்த கன்னட படத்தின் டீசர் இன்று வெளியீடு!

image

இப்படத்தின் டீசர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று, காலையில் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் சரியாக 4 மணிக்கு, `தொழில்நுட்ப கோளாறு காரணமாக டீசர் வெளியீடு தள்ளிப்போகிறது. எப்போது என்ற நேர விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது. இப்படத்தில் நடிக்க அண்ணாமலை ரூ.1 மட்டுமே சம்பளம் வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.