கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி தெலங்கானா மாநிலம் சென்ற போதும் அவரை சந்திரசேகர ராவ் புறக்கணித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஹைதராபாத் நகருக்கு வருகை தரும்போது, தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மரபுப்படி பிரதமரை வரவேற்க மாட்டார் என்கிற தகவல் பாஜக தலைவர்களிடையே  அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூர் நகரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவருடைய மகன் குமாரசாமி ஆகியோரை சந்திக்க கர்நாடக தலைநகர் செல்வதாக சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். பிரதமரை புறக்கணிக்க முதல்வர் சந்திரசேகர ராவ் வேண்டுமென்றே இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், பெங்களூர் சென்று தேவகவுடாவை சந்திக்கும் திட்டத்தை தள்ளி போட்டிருக்கலாம் என்றும் தெலுங்கானா மாநில பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி தெலங்கானா மாநிலம் சென்ற போதும் அவரை சந்திரசேகர ராவ் புறக்கணித்தார் என பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். மாநிலத்துக்கு வரும் பிரதமரை மரபுப்படி வரவேற்கக் கூட முதல்வருக்கு மனதில்லை என அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

image

பொதுவாக பிரதமர் ஒரு மாநிலத்திற்கு வருகை தரும்போது, அவரை அந்த மாநில முதல்வர் மற்றும் ஆளுநர் வரவேற்பது நாடு முழுவதும் பின்பற்றப்படும் மரபாகும். இன்று ஹைதராபாத் நகரத்தில் பிரதமர் நரேந்திர மோடி “இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்” என்று அழைக்கப்படும் உயர்கல்வி அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஹைதராபாதில் பிரதமர் நரேந்திர மோடியை மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் தெலுங்கானா அமைச்சர் ஸ்ரீ நிவாஸ் யாதவ்  ஆகியோர் வரவேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியை தலைவர்களும் பிரதமர் மோடியை ஹைதராபாத் விமான நிலையத்தில் வரவேற்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் பகுதிகளைச் சேர்ந்த பாஜக தொண்டர்கள் இந்த வரவேற்பு ஏற்பாட்டில் கலந்து கொள்வார்கள் என அதற்காக போலீஸ் பந்தோபஸ்து உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சமீப மாதங்களாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். மத்திய அரசு மற்றும் பாஜகவுடன் மோதல் போக்கில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பயணித்துக் கொண்டிருக்கிறது என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. நெல் கொள்முதல் விவகாரத்தில் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர்கள் டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சுப்ரபாதம் கலந்துகொண்டபோது அவரை சந்திப்பதை சந்திரசேகரராவ் தவிர்த்து அதற்கு இதுவே காரணம் என பாஜக தலைவர்கள் கருதுகிறார்கள். அதே பாணியில் அவர் தற்போதும் பிரதமர் மோடியை புறக்கணிக்கிறார் என்பதே பாஜக தலைவர்களின் குற்றச்சாட்டு.

– கணபதி சுப்பிரமணியம்.

இதையும் படிக்கலாம்: மங்களூரு மசூதிக்குள் கோயில் போன்ற அமைப்பா? பதற்றத்தால் 144 தடை அமல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.