ஒற்றை காலில் ஒரு கி.மீ குதித்தவாறு தினமும் பள்ளிக்கு செல்லும் சிறுமிக்கு செயற்கைக் கால் பொருத்துவதற்கு உதவுகிறேன் என்று நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

பீகாரின் ஜமுய் நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி சீமா குமாரி. 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த கிராமமான ஃபதேபூரில் டிராக்டரின் சக்கரங்களுக்கு இடையே சிக்கி விபத்துக்கு உள்ளானார் சீமா. சிகிச்சையின்போது காயமடைந்த இடது கால் துண்டிக்கப்படாவிட்டால், அவள் உயிரிழக்க நேரிடும் என மருத்துவர்கள் சீமாவின் பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் சீமா உயிரே முக்கியம் என முடிவு செய்து காலை எடுக்க சம்மதிக்கவே, இடது காலை நீக்கி சீமாவின் உயிரை காப்பாற்றினர் மருத்துவர்கள்.

Bihar Girl With One Leg: Jumping to school on one leg! Kurnish Netdunia's  indomitable mentality of 10 years limit Bihar Girl With 1 Leg Is  Unstoppable As She Walks A km To

ஒரு காலை இழந்தபோதும், சீமா தனது நம்பிக்கையை இழக்கவில்லை. அந்த ஒற்றைக் காலுடன் குதித்தவாறே தன் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு தினமும் சென்று வருகிறார். “நான் படித்து ஆசிரியராக விரும்புகிறேன். அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதே என் குறிக்கோள்” என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் சீமா.


சீமா பள்ளிக்கு ஒற்றைக் காலில் குதித்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து ஜமுய் மாவட்ட ஆட்சியர் அவனிஷ் குமார் சீமாவின் வீட்டிற்கு சென்று அவருக்கு மூன்று சக்கர வண்டி ஒன்றை வழங்கினார். இந்நிலையில் சீமாவிற்கு செயற்கை கால் பொருத்த தாம் உதவி செய்ய தயாராக இருப்பதாக நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இப்பொழுதெல்லாம் ஒன்றல்ல… இரண்டு கால்களில் குதித்துக்கொண்டு (சீமா) பள்ளிக்குப் போவாள். நான் டிக்கெட் அனுப்புகிறேன். இரண்டு கால்களிலும் நடக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார்.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.