அளவற்ற சர்வதேச அழைப்புகள் மற்றும் அளவற்ற டேட்டா கொண்ட புதிய பேக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது வோடபோன் ஐடியா.

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான  வோடபோன் ஐடியா சமீபகாலமாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக பல அசத்தலான பிளான்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வோடபோன் ஐடியா நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்காக புதிதாக சர்வதேச ரோமிங் வாய்ஸ் மற்றும் டேட்டா பேக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 599 ரூபாயில் இருந்து தொடங்கும் இந்த ரோமிங் பிளான் அதிகபட்ச வரம்பாக 5,999 ரூபாய் வரை இருக்கிறது. இதற்கு 28 நாட்கள் வேலிடிட்டி அளிக்கப்படுகிறது. அளவற்ற சர்வதேச அழைப்புகள் மற்றும் அளவற்ற டேட்டா வழங்கப்படுகிறது.

image

ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு இந்த இன்டர்நேஷனல் ரோமிங் பேக் செல்லுபடியாகும்.  இதன் மூலம் வெளிநாடு செல்வோர் தங்கள் உறவுகளுடன் தொடர்பில் இருப்பதை இந்த பிளான் எளிமையாக்குவதாக வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. காலாவதியான பிறகு வாடிக்கையாளர்கள் நாளொன்றுக்கு  599 ரூபாய் என்கிற கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்: எஃகு பொருட்களுக்கு 15% ஏற்றுமதி வரி – ஐரோப்பா ஆர்டர்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.