டிக்கெட் இன்றி ரயில் முன்பதிவு பெட்டியில் ஏறி வடமாநிலத்தவர்கள் அட்டகாசம்

ரயில் முன்பதிவு பெட்டிகளில் ஏறி வடமாநிலத்தவர்கள் அட்டகாசம் செய்ததால் கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

கொல்கத்தாவில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கபடும் வாராந்திர சிறப்பு ரயிலில் அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், ரயில் சென்னை எழும்பூர் வந்த நிலையில், முன்பதிவு பெட்டிகளில், முன்பதிவு செய்யாத வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் பயணம் செய்துள்ளனர்.

image

இதனால் வடமாநிலத்தவர்கள் மற்றும் தமிழர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அதிகமாக பெண்கள் பயணித்த பெட்டிகளில் அரைகுறை ஆடைகளுடன் வடமாநிலத்தவர்கள் பயணித்த நிலையில், பெண்கள் மூன்று முறை ரயிலை நிறுத்தி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்த நிலையில், ரயில்வே ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்கள் குழந்தைகள் என முன்பதிவு செய்து செல்லும் பெட்டிகளில் முறையான பயணசீட்டு இன்றி அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் பயணம் செய்வதால் பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தனர்.

image

இதனால் 1மணி நேரத்திற்கும் மேலாக செங்கல்பட்டு ரயில் நிலைய அதிகாரியை முற்றுகையிட்ட பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே மற்றும் செங்கல்பட்டு நகர போலீசார் முன்பதிவு செய்த பெட்டிகளில் இருந்த வடமாநிலத்தவர்களை இறக்கி வேறு ரயில்களில் அனுப்பி வைத்தனர். இதனால் ரயில் 1மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM