தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மே 19-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘ஜிஎஸ்டி வரி: மாநில அரசுகளுக்கு அதிகாரம்… உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியா? சர்ச்சைக்குரியதா?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.

கர்ணன்

Gst நிலுவை தொகையை தராத நிலையில் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை..கல்வி மருத்துவ வசதிகளுக்கு வரி மதுபானத்திற்கு வரிவிலக்கு இப்படி ஒரு கேடுகெட்ட வரி எதற்கு…கண்ணா இரண்டாவது லட்டு திண்ண ஆசையா என்பது போலவே இரண்டாவது உத்தரவு
1.அறிவு விடுதலை
2.Gst தீர்ப்பு

N RAGHUNATHAN

சர்சைகுறியதே. இப்படி ஜனநாயகத்தின் மற்றொரு அங்கமாகிய அரசாங்கத்தில் தலையிடுவதற்கு அவர்களே ஆட்சி செய்து விடலாம். ஜனநாயகத்தின் ஒவ்வொரு தூணுக்கும் ஒரு எல்லை உண்டு ஒருவரும் அதை மீறக்கூடாது.

image

Nellai D Muthuselvam

ஜிஎஸ்டி கவுன்சிலில் ஏற்கெனவே மாநில அரசுகளுக்கு தான் அதிகாரம் அதிகமாக உள்ளது. கூட்டாட்சி தத்துவத்தை உணர்த்துவதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் உருவாக்கும் போது மாநில அரசுகளுக்கு அதிகமாக அதிகாரங்கள் தரப்பட்டது. அன்று முதல் இன்று அது தொடர தான் செய்கிறது. உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உள்ளதை தான் உறுதிபடுத்தி உள்ளது. இதில் எந்த சர்ச்சையும் இல்லை.

Common Man

அரசியல் அமைப்பு சட்ட கட்டமைப்பின் வலிமை என்ன என்று சங்கிகளுக்கு இப்போதாவது தெரிந்திருக்கும்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.