ஜெர்மனியில் நடந்த ஏலத்தில் ரூ.1100 கோடிக்கு விற்கப்பட்டதன் மூலம், உலகின் மிகவும் விலையுயர்ந்த கார் என்ற பெருமையை 1955 ஆம் ஆண்டின் மெர்சிடஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர் கார் பெற்றுள்ளது.

மே 5 அன்று ஜெர்மனியில் நடந்த ரகசிய ஏலத்தில் 1955 ஆம் ஆண்டு Mercedes-Benz 300 SLR Uhlenhaut Coupé 135 மில்லியன் யூரோக்களுக்கு (1,100 கோடி ரூபாய்) விற்கப்பட்டது என்பதை மெர்சிடஸ் பென்ஸ் நிறுவன தலைவர் ஒலா கல்லீனியஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு முன்பாக 2018 ஆம் ஆண்டில் ஆர்எம் சோதேபிஸ் (RM Sotheby) நிறுவனம் நடத்திய ஏலத்தில் 1962 ஆம் ஆண்டின் ஃபெராரி 250 GTO கார் $48.4 மில்லியனுக்கு ஏலம் போனது முந்தைய சாதனையாக இருந்தது என்று கனடாவை தளமாகக் கொண்ட ஏல நிறுவனமான ஆர்எம் சோதேபிஸ் தெரிவித்துள்ளது.

Meet Rs 1100 crore Mercedes-Benz 300 SLR, world's most expensive car sold  at auction | Auto News | Zee News

ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் உள்ள மெர்சிடஸ் பென்ஸ் அருங்காட்சியகத்தில் மே 5 அன்று நடந்த ரகசிய ஏலத்தின் போது இந்த சாதனை விற்பனை நடந்தது. இது தொடர்பாக மே 18 அன்று மான்டே கார்லோவில் நடந்த ஒரு நேர்காணலின் போது பேசிய ஒலா கெல்லீனியஸ், “மெர்சிடஸ் பிராண்டின் சக்தியை நிரூபிக்க ஒரே ஒரு செயலால் நாங்கள் விரும்பினோம் எனவே இந்த ஏலத்தை நடத்தினோம் ” என்று  கூறினார். மிகவும் அரிதான அம்பு வடிவ கூபே வகை வாகனமான இது  இதுவரை தயாரிக்கப்பட்ட இரண்டு வகை கார்களில் ஒன்றாகும்,

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.