பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக இணைகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ராதே ஷ்யாம்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ‘சலார்’, ‘ஆதி புருஷ்’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. அடுத்ததாக, கீர்த்தி சுரேஷி ‘மகா நடி’ இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்திலும் ‘அர்ஜுன் ரெட்டி’ இயக்குநர் சந்தீப் வாங்கா இயக்கத்திலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

இதில், சந்தீப் வாங்காவின் படம் பிரபாஸின் 25 படமாக உருவாகவுள்ளது. சந்தீப் வாங்காவின் ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ உள்ளிட்டப் படங்கள் வசூல் சாதனை செய்தவை என்பதால், தற்போது பிரபாஸுடனான படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ‘ஸ்பிரிட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை பிரபாஸின் ‘சாஹோ’, ‘ராதே ஷியாம்’ மற்றும் ‘ஆதி புருஷ்’ ஆகிய படங்களைத் தயாரித்த டி சீரிஸ் என்டெர்டெயின்மென்ட், யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

image

இந்த நிலையில், இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. தற்போது, ‘விஜய் 66’ படத்தில் நடித்துவரும் ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில், அமிதாப்புடன் ‘குட் பை’, ரன்வீர் சிங்குடன் ‘அனிமல்’ உள்ளிட்டப் படங்களிலும் நடித்து வருகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.