கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

உள்நாட்டில் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 மாதங்களாகவே கோதுமையின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனியார் அதிக விலைக்கு கோதுமையை வாங்குவதால், விவசாயிகள் அரசு கொள்முதலுக்கு விற்பனையை குறைத்துள்ளனர்.

கோதுமையை வாங்கும் தனியார் அதிக அளவில் ஏற்றுமதி செய்தால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படலாம் என மத்திய அரசு கருதுகிறது. அதனால் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒப்பந்தம் செய்தவர்கள் ஏற்றுமதியை தொடர அனுமதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

French soft wheat crop rating stable - Markets - Business Recorder

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உலகச் சந்தையில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விலை அதிகரித்து வருவதால், எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து கோதுமை ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், தற்போது மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM