நடிகை காஜல் அகர்வால் முதன்முறையாக தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால், கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபரான கவுதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடிகை  காஜலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பான குழந்தையின் புகைப்படம் வெளியாகி வைரலாகி இருந்தது.

image

இந்நிலையில், அன்னையர் தினமான இன்று நடிகை காஜல் அகர்வால் முதன் முறையாக தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். காஜல் அகர்வாலின் மார்பின் மேல் அவரின் குழந்தை குப்புறப்படுத்த மாதிரியான அழகான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்துடன் உருக்கமான பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார் காஜல் அகர்வால்.

அதில், ”எனது மகனே நீ என்னுடைய வாழ்வில் எவ்வளவு பொக்கிஷம் என்பதை உணர்ந்து கொண்டேன். நான் உன்னை கைகளில் வாங்கியபோது, உன் சிறிய கையை பிடித்தபோது, உன் சுவாசத்தை உணர்ந்துபோது, உன் அழகான கண்களைப் பார்த்தபோது அன்பு என்பதை உணர்ந்து கொண்டேன். நீ தான் என் முதல் குழந்தை, எல்லாமே நீதான் முதலில்; உனக்கு தாயாக பல்வேறு விஷயங்களை உனக்கு கற்று தருவேன்.

எல்லையில்லாத, அளவிட முடியாத அன்பையும், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பல்வேறு விஷயங்களையும் எனக்கு கற்று கொடுத்தவன் நீ தான். உடலை தாண்டி எனது உயிரை உணர வைத்த எனது மகனே, உனக்கு அன்னை ஆனதில் நான் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

image

இந்த புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளையும் மகிழ்ச்சிகளையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகை சமந்தா அந்த பதிவில்  “Absolutely beautiful my love” என கமெண்ட் செய்துள்ளார். காஜல் அகர்வாலின் சகோதரி நிஷா அகர்வாலும் தனது வாழ்த்தையும் ஆசீர்வாதங்களையும் வழங்கி இருந்தார்.

இதையும் படிக்கலாம்: திருப்பதியில் விக்னேஷ் சிவனை மணக்கிறார் நயன்தாரா – எந்த தேதியில்?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.