பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடித்திருக்கும் இந்திய திரைப்படமான Liger வரும் ஆகஸ்டு 25ஆம் தேதி வெளியாகிறது.

விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்து பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள திரைப்படம் Liger. இந்தத் திரைப்படத்தில் உலகப்புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரின் காட்சிகளை படமாக்க பூரி ஜெகன்நாத் உள்ளிட்ட படக்குழுவினர் அமெரிக்கா சென்று படமாக்கினர். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து தற்போது இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் முதன்முறையாக இந்திய படத்தில் நடித்ததுடன் தற்போது படத்திற்கான டப்பிங்கையும் பேசி முடித்திருக்கிறார் மைக்டைசன்.

image

விஜய் தேவரகொண்டா – மைக்டைசன் இணைந்து நடித்திருக்கும் Liger திரைப்படத்தை இயக்குநர்கள் பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர் மற்றும் நடிகை சார்மி கவுர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கின்றனர். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் 25ஆம் தேதி லிகர் படத்தை தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பண்பொழி திரைப்படமாக வெளியிடுகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.