நடிகர் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பிரபாஸ் – பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த மார்ச் 11 ஆம் தேதி உலகம் முழுக்க தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான ‘ராதே ஷ்யாம்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக இப்படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் பாராட்டுக்களைக் குவித்தது. கைரேகை நிபுணராக நடிப்பில் கவனம் ஈர்த்தார் பிரபாஸ். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க யூவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர்.

ஆஸ்ட்ரோ த்ரில்லர் ப்ளஸ் காதல் கதைக்களத்துடன் வெளியான இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிகர் சத்யராஜ், பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா என பலரும் நடித்துள்ளனர்.

image

இந்த நிலையில், ’ராதே ஷ்யாம்’ படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக படத்தின் வசூல் அப்டேட்டை இன்று பகிர்ந்துள்ளனர். கடந்த 10 நாட்களில் இதுவரை தியேட்டரில் மட்டுமே 204 கோடி வசூல் செய்ததாகவும், தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகள் ரூ.200 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வசூலில் மொத்தம் இதுவரை ‘ராதே ஷ்யாம்’ 400 கோடியை கடந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.