உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில். பல்வேறு தடைகளை உலக நாடுகளும், உலகின் முன்னணி நிறுவனங்களும் அமல் செய்துள்ளன. இந்நிலையில் ரஷ்யா மீதான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் பதிவுகளை போஸ்ட் செய்ய அனுமதி அளித்தது மெட்டா நிறுவனம். அதையடுத்து தங்கள் நாட்டில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மாதிரியான மெட்டா நிறுவன சமூக வலைதள பக்கங்களுக்கு தடை விதித்தது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமாக இயங்கி வந்த ரஷ்ய செலிபிரிட்டி ஒருவர் உருக்கமான பதிவை போஸ்ட் செய்துள்ளார்.
“இன்ஸ்டாவில் நான் செலிபிரிட்டியாக இருப்பதால் எனக்கு வருமானம் கிடைக்கும் என நீங்கள் கருதலாம். ஆனால் எனக்கு இன்ஸ்டா தான் உயிர். எனது வாழ்க்கை. எனது ஒவ்வொரு நாளும் அதனோடு தொடங்கும், அதோடு நிறைவடையும்” என கண்கலங்க தெரிவித்துள்ளார் அவர்.