‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை திரையிடக் கூடாது என பாமகவினர் வலியுறுத்திய நிலையில், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது என நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரசிகர்களின் கூட்டத்தை விட போலீசாரின் கூட்டமே அதிகளவில் காணப்பட்டது

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது. சென்னை உட்பட பெரிய மாவட்டங்களில் அதிகாலை சிறப்பு காட்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டாலும் சில மாவட்டங்களில் பா.ம.க. வின் அறிவிப்பால் வன்முறை ஏற்படலாம் என்ற அச்சத்தால் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது.

image

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் 12 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. ஆனால், ரசிகர்களின் வருகை இல்லாததால் சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. முதல் காட்சி காலை 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. ஆனாலும் ரசிகர்களின் கூட்டம் மிக குறைவாகவே காணப்பட்டது.

image

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் விமர்சனத்தைப் படிக்க க்ளிக் செய்யுங்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.