அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற “Central Texas State Fair” என்ற நான்கு நாள் கண்காட்சி நிகழ்வில் Bull ரைடிங் விளையாட்டில் ஈடுபட்ட 18 வயது இளைஞர் ஒருவர், அவர் ரைட் செய்த காளையிலிருந்து தூக்கி வீசப்பட்டார். பின்புறமாக தரையில் விழுந்த காரணத்தால் அவர் மயங்கிய நிலையில் காணப்பட்டார். நம் ஊரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போல அமெரிக்காவில் Bull ரைடிங் விளையாட்டு மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. 

image

இருந்தும் திமிறிக் கொண்டிருந்த அந்த காளை அந்த இளைஞனை முட்டி மோதி தூக்கி வீச முயன்றது. அதை கவனித்த அந்த இளைஞனின் தந்தை தன் மகனை அப்படியே கட்டியணைத்தபடி தரையில் படுத்துவிட்டார். இருந்தும் அந்த பாசக்கார தந்தையின் தலையை காளை முட்டியது. அப்போதும் தனது மகனை இறுக பற்றியிருந்த தனது பிடியை அவரது பிடியை அவர் விடவில்லை. பின்னர் அங்கிருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காளையை விரட்டி அடித்தனர். சிறு காயம் கூட ஏற்படாமல் தனது மகனின் உயிரை காத்த மகிழ்வுடன் எழுகிறார் அந்த தந்தை. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி உள்ளது. 

View this post on Instagram

A post shared by Cody Hooks (@cody__hooks)


கடந்த மாதம் இன்ஸ்டா தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அந்த பாசக்கார தந்தைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். “மகனின் உயிர் காக்க காளையிடம் தன் உயிரை பணயம் வைத்த தந்தை”, “உங்கள் அப்பா ஒரு லெஜன்ட்” என்றெல்லாம் அவரை பாராட்டி கமெண்டுகள் பறக்கிறது. இந்த வீடியோவை காளையின் கொம்புகளில் இருந்து மயிரிழையில் தப்பிய அந்த 18 வயது இளைஞர் பகிர்ந்துள்ளார். அந்த இளைஞனின் பெயர் Cody ஹூக்ஸ். அவரது அப்பாவின் பெயர் Landis ஹூக்ஸ். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.