ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் அண்மையில் நடந்த அப்டேட்டுகள் குறித்து பார்ப்போம். 

  • ரஷ்யா – உக்ரைன் இடையே பெலாரஸில் பேச்சுவார்த்தை தொடங்கியது.
  • ரஷ்யா படையெடுப்புக்கு எதிராகவும், முக்கிய நகரங்களில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவும், உக்ரைன் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
  • பெலாரஸில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, உக்ரைனுடன் ஒரு உடன்பாட்டை எட்ட விரும்புவதாக ரஷ்யா கூறியுள்ளது என பேச்சுவார்த்தை நடுவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் தரப்பில், ரஷ்ய படைகளை திரும்ப பெற வேண்டும், உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
  • அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறிய நிலையில் தான் இந்த பேச்சுவார்த்தையானது ஒப்புக்கொள்ளப்பட்டது.

image

  • உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனைக்கூட்டத்தை கூட்ட உள்ளது. இந்த கூட்டத்தை இந்தியா வாக்களிக்கப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 
  • உக்ரைனிய எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல், ரஷ்ய படையின் வேகம் குறைந்துவிட்டதாக என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
  • உக்ரைன் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
  • உக்ரைன் நாட்டின் கிழக்கில் உள்ள தனது இரண்டாவது நகரமான கார்கிவில் இருந்து ரஷ்ய துருப்புக்களை வெளியேற்றியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
  • உக்ரைனில் 7 குழந்தைகள் உள்ளிட்ட 102 பொதுமக்கள் கொல்லப்பட்டுவிட்டதாக ஐ.நா தெரிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் சண்டையிலிருந்து வெளியேறி வருவதாக ஐநா அகதிகள் நிறுவனம் கூறியுள்ளது. மொத்த எண்ணிக்கை 400,000 ஐ எட்டுவதால் பெரும்பாலானவர்கள் போலந்திற்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். மற்றவர்கள் ஹங்கேரி, ருமேனியா, மால்டோவா மற்றும் ஸ்லோவாக்கியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
  • பெர்லினில் இருந்து பாக்தாத் முதல் குய்ட்டோ வரையிலான ஒற்றுமை ஊர்வலங்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். ரஷ்யாவிற்குள்ளேயே அதன் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாக 5,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • குகூள், பேஸ்புக் மூலம் ரஷ்ய அரசு ஊடகங்கள் வருமானம் பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைனில் இன்டர்நெட் சேவையை முடக்கியுள்ள நிலையில், உக்ரைனில் செயற்கைகோள் மூலம் பிரான்ட்பேண்ட் சேவையை வழங்குமாறு ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.