மலையாள முறைப்படித் திருமணம்: காதலரை மணந்தார் ‘நாகினி’ சீரியல் நடிகை மெளனி ராய்

‘நாகினி’ சீரியல் நடிகை மெளனி ராய் – சுரேஷ் நம்பியார் திருமணம் இன்று கோவாவில் நடைபெற்றது

கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியில் ஒளிபரப்பான ‘நாகினி’ சீரியல் மூலம் கவனம் பெற்றார் நடிகை மெளனி ராய். இந்தியில் சூப்பர் ஹிட் அடித்ததால் தமிழிலும் தனியார் ஊடகம் ஒன்று டப்பிங் செய்து வெளியிட்டது. அப்போது, தமிழில் வந்துகொண்டிருந்த சீரியல்களையே பின்னுக்குத் தள்ளி ‘நாகினி’ டிஆர்பியில் முதலிடம் பிடித்து ஆச்சர்யப்படுத்தியது. இதன், வெற்றியால் மெளனி ராய் நடிப்பிலேயே ‘நாகினி 2’ சீரியலும் தமிழில் ஒளிபரப்பானது.

image

அந்தளவுக்கு கவர்ச்சியான நடிப்பால் கவனம் ஈர்த்திருந்தார் மெளனி ராய். இந்தி சீரியலில் முன்னணி நடிகையாக இருக்கும் மெளனி ராய்யின் திருமணத்தை இந்தி ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். தமிழிலும் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

image
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபர் சுரேஷ் நம்பியாரை மெளனி ராய் காதலித்து வந்தார். அவருடன் இருக்கும் புகைப்படங்களும் கடந்த இரண்டு வருடங்களாக வைரலாகி வந்தன. இந்த நிலையில், மெளனி ராய் – சுரேஷ் நம்பியார் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் இன்று காலை மலையாள முறைப்படி கோவாவில் நடைபெற்றது. கேரள பாரம்பரிய சேலையை அணிந்துள்ள மெளனி ராய்யின் புகைப்படங்கள் ரசிக்க வைக்கின்றன. 36 வயதாகும் மெளனி ராய் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். அதனால், பெங்காலி முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

image

இவர்களது திருமணத்தில் நடிகை மந்த்ரா பேடி, இந்தி சீரியல் நடிகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM