மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் பரப்புரை செய்து வரும் நிலையில், முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான பிரேன் சிங், சர்ச்சைக்குரிய சட்டத்தை நீக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3-ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்த மாநிலமாக இருந்தாலும் தேர்தல் நேரத்தில் முக்கிய பிரச்னை ஒன்றை அரசியல் கட்சிகள் கையில் எடுத்து வாக்குறுதிகளை அளித்து, பரப்புரை களத்தில் அனலை கிளப்பும். அந்த வகையில் மணிப்பூர் மாநிலத்தில் முக்கிய பிரச்னையாக இருப்பது AFSPA என்று அழைக்கப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்.

image

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென பல ஆண்டுகள் தொடர்ந்து உணவு எடுத்துக்கொள்ளாமல் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டார் ஐரோம் ஷர்மிளா. இந்த நிலையில் மீண்டும் ஒரு முறை ஆட்சி அமைத்தால் மணிப்பூரில் இருந்து நிச்சயமாக இந்த சட்டத்தை அகற்ற மத்திய அரசுக்கு அனைத்து அழுத்தத்தை தருவேன் என்று பாஜக மூத்த தலைவரும் மணிப்பூர் மாநிலத்தின் முதல்வருமான பிரேன் சிங் பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆளும் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த போதும் இந்த சட்டத்தை எதிர்த்து மத்திய அரசிடம் வலியுறுத்துவேன் என்று அவர் கூறுகிறார். அதே நேரம் தேசப் பாதுகாப்பு குறித்தும் பார்க்க வேண்டியது இருப்பதாக பிரேன் சிங் தெரிவிக்கிறார். மறுபுறம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை கையில் எடுத்து பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. 1958ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் முதலில் மணிப்பூரில் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டது.

image

அமைதிக்கு குந்தகம் ஏற்படலாம் என கருதப்படும் பகுதிகளில் ஆயுதமேந்திய இந்திய ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் பொழுது அவர்களுக்கு என தனியாக சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது இச்சட்டம். பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் வாரண்ட் இல்லாமல் எந்த ஒரு நபரையும் கைது செய்யவும் சோதனைகளை மேற்கொள்ளவும் நிலைமை கையை மீறும் பட்சத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தவும் அதிகாரம் வழங்குகிறது. இந்த சர்ச்சைக்குரிய சட்டம் எப்போது நீக்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

இதையும் படிக்க: காந்தியை கொல்ல கோட்சே ‌பயன்படுத்திய‌ Beretta M1934 துப்பாக்கியின் பின்னணி!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.