நாளை ஓடிடியில் வெளியாகும் நானி – சாய் பல்லவியின் ‘ஷ்யாம் சிங்கா ராய்’

நானி – சாய் பல்லவியின் ‘ஷ்யாம் சிங்கா ராய்’ நாளை ஓடிடியில் வெளியாகிறது.

நானி – சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் கடந்த மாதம் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியான ‘ஷ்யாம் சிங்கா ராய்’ கொரோனா மூன்றாவது அலை பரவலிலும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று இதுவரை 63 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. நானி இரட்டைக் கதாபாத்திரங்களில் நடித்த இப்படத்தினை ராகுல் சங்ரித்யன் இயக்கியுள்ளார்.

image

தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ்,கன்னடம், மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளிலும் வெளியான, இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், நாளை ஜனவரி 21 ஆம் தேதி ’ஷ்யாம் சிங்கா ராய்’ வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக தற்போது படக்குழு அறிவித்திருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM