உக்ரைன் பகுதியை பிடிக்க ரஷ்யா மேற்கொண்டு முயற்சி எடுத்தால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகளை முழுமையாக வாபஸ் பெற்றுக் கொண்டதற்காக வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை என்றும் கூறினார். உக்ரைன் விவகாரம் குறித்து பேசிய பைடன், ரஷ்யா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

Biden Says Invading Ukraine Would be 'Disaster' For Russia - The Moscow  Times

உக்ரைனின் பாதுகாப்பிற்காக அதிநவீன ராணுவ உபகரணங்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் போர் தொடுக்க முயன்றால், ரஷ்யாவுக்கு தான் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்றும் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.