நொய்டா சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வாகியுள்ளது ‘ஜெய் பீம்’ திரைப்படம்.
சூர்யா நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான ‘ஜெய் பீம்’ பெரும் வரவேற்பைப் பெற்று பாராட்டுகளைக் குவித்து வருகிறது. தா.செ ஞானவேல் இயக்கிய இப்படம் ஏற்கனவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுக்கொண்டு வரும் நிலையில், தற்போது 9-வது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்கள். 50 க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் திரைப்படங்கள் போட்டியிடும் இவ்விழா வரும் ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஏற்கனவே, ’ஜெய் பீம்’ ஐஎம்டிபி இணையதளத்தில் அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியப் படமாகாவும் அறிவிக்கப்பட்டது. ஆஸ்கர் யூடியூப் தளத்தில் இடம்பிடித்த முதல் தமிழ் படமாகவும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
வைரமுத்துவுக்கு ஓ.என்.வி விருது வழங்க சின்மயி, பார்வதி எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு விருது அறிவிக்கப்பட்டது மறுபரிசீலனை செய்யப்படும் என்று ஓஎன்வி கலாச்சார மையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட […]
தியேட்டர்களை அக்டோபர் 15-ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளுடன் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தியேட்டர்கள் தந்த அனுபவங்கள் ரசனையானவை. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தியேட்டர்லவ் என்ற பெயரில் பிரபலங்களின் ஞாபகங்களை […]
இயக்குநர் லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கும் “ராம்பொத்தேனி 19’ படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஜூலையில் இருந்து துவங்கவுள்ளது. ’சண்டக்கோழி 2’ படத்திற்குப் பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக படங்கள் இயக்காமல் இருந்த இயக்குநர் லிங்குசாமி, […]
பலரும் எதிர்பார்த்த மணி ஹெய்ஸ்ட் வெப்சீரிஸின் 5வது பாகம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது. நாடு முழுவதும் கொரோனா முதல் அலையின்போது, மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கினர். அப்போது, அவர்களுக்கு ஒரே பொழுதுபோக்காக இருந்தது ஓடிடி […]