இந்தியாவில் கடைசி இரண்டு வருடத்தில் காடுகளின் பரப்பு 2261 சதுர கிலோமீட்டர் அதிகரித்திருப்பதாக இந்திய வன ஆய்வு அறிக்கை 2021-ல் தெரிய வந்துள்ளது. 

image

இந்தியாவின் காடுகளின் பரப்பு, தன்மை, சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்து வருடம் தோறும் மத்திய சுற்றுச்சூழல் துறை இந்திய வன ஆய்வு அறிக்கையை வெளியிடுகிறது. அதன்படி இந்த வருடத்திற்கான வன அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் வெளியிட்டார்.

அதில் இந்தியாவில் மொத்தமாக 80.9 மில்லியன் ஹெக்டேர் பரப்பில் காடுகள் உள்ளது, அது நாட்டின் மொத்த பரப்பில் 24 சதவீதம் என இந்திய வன ஆய்வு 2021 அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 17 மாநிலங்களில் பரப்பில் 33% காடுகளின் பரப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

சதுப்பு நிலக் காடுகளின் பரப்பு 4992 சதுர கிலோமீட்டர் உள்ளது. கடைசி இரண்டு வருடத்தில் 17 சதுர கிலோமீட்டர் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 45 சதுர கிலோமீட்டர் சதுப்பு நிலக்காடுகள் உள்ளது. 2019ம் ஆண்டும் தமிழகத்தில்  சதுப்பு நிலக் காடுகளின் பரப்பு 45 சதுர கிலோமீட்டர் இருந்தது. புகழ்பெற்ற சுந்தரவன காடுகளின் பரப்பு 3 சதுர கிலோமீட்டர் குறைந்துள்ளது.

image

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடத்தில் 55 சதுர கிலோமீட்டர் காடுகளின் பரப்பு அதிகரித்துள்ளது. அடர்ந்த காடுகளின் பரப்பு 12 சதுர கிலோமீட்டர்கள் குறைந்துள்ளது. அதே நேரத்தில் மிதமான காடுகளின் பரப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் அதிகபட்சமாக 647 மதுரை கிலோமீட்டர் காடுகளின் பரப்பு அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தெலுங்கானாவில் 632 சதுர கிலோமீட்டர்கள், ஒடிசாவில் 537 சதுர கிலோமீட்டர்கள் அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் மரங்கள் சூழ்ந்துள்ள பரப்பாக 4424 சதுர கிலோமீட்டர் உள்ளது. இது மாநிலத்தின் மொத்த பரப்பில் 3.4 % ஆகும். காடுகளில் இல்லாத மரங்களையும் சேர்த்தால் மாநிலத்தின் பரப்பில் 10.24% மரத்தின் பரப்பு உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.