தமிழகத்தில் ஒமைக்ரான் நோய்த் தொற்று நோய் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசு மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரித்திருக்கிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
`பண்டிகை காலங்களில் பொது மக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூடுவதால் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தார்கள். அதைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் நலன் கருதி கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகள் வரும் 10.01.2022 வரை தொடரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
* சமுதாய கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும்.
* மழலையர் விளையாட்டு பள்ளிகள் நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.
* அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 10 1 2020 2 முடிய நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.
* அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்தி வைக்கப்படுகிறது.
ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருக்கும் பின்வரும் செயல்பாடுகள் உரியக் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
* ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள் கல்லூரிகள் தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்படும்.
* வழிபாட்டுத் தலங்களைப் பொருத்தவரை தற்போது நடைமுறையிலிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்.
* உணவகங்கள் விடுதிகள் தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களை 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படும்.
* பொழுதுபோக்கு கேளிக்கை பூங்காக்கள் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் செயற்பட அனுமதிக்கப்படுகிறது.

* திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.
* இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.
* துணிக் கடைகள் மற்றும் நகைக் கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுக்கு மீகாமன் செயல்படுவதைக் கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
* கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள் விளையாட்டுக்கள் உணவகங்கள் ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளருடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
* உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளருடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் உள்ள இருக்கைகளுக்கு மிக அமல் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படும்.
* மெட்ரோ ரயிலில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
* திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவிகித பார்வையாளர்கள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
* திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.
* உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50 சதவிகித பார்வையாளர்களுடன் விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.
* அழகு நிலையங்கள் சலூன்களில் ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.
* ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரியக் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்,
என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.