“சென்னை வானிலை ரேடார்களை உடனடியாக சரி செய்க” – தயாநிதி மாறன் கோரிக்கை

சென்னையில் பழுதடைந்துள்ள வானிலை ரேடார்களை உடனடியாக சீரமைக்குமாறு, மத்திய அரசை தி.மு.க எம்.பி. தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் பழுதடைந்துள்ள வானிலை ரேடார்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கக் கோரி, ஏற்கனவே 2 முறை பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்ததாக தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் பல முறை கேள்விகள் எழுப்பியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

image

ரேடாரின் பழுதை சீரமைக்காததால் கனமழை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வழங்க முடியவில்லை என்று தயாநிதி மாறன் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் வியாழனன்று பெய்த பெருமழையினால் குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த இன்னல்களுக்கு ஒன்றிய அரசின் தாமதமே காரணம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM