‘புஷ்பா’ இன்று வெளியாகியுள்ளதையொட்டி தியேட்டருக்கே சென்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் நடிகர் அல்லு அர்ஜுன்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘புஷ்பா’ இன்று இந்தியா முழுக்க வெளியாகியுள்ளது. செம்மரக்கட்டைக் கடத்தல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடித்துள்ளார். படம் வெற்றிபெற தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, நடிகர்கள் ராம் சரண், வருண் தேஜ், சாய் தரம் தேஜ், நானி என தெலுங்கின் முன்னணி நடிகர்கள் பலரும் தங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

image

இந்த நிலையில், திருப்பதியில் உள்ள சந்தியா தியேட்டருக்கு படம் பார்க்க வந்த ரசிகர்கள் முன்பு காரில் தோன்றி ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன். ரசிகர்களும் அல்லு அர்ஜுனும் தியேட்டரில் கையசைத்துக்கொள்ளும் வீடியோவை ‘புஷ்பா’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பகிர்ந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.