அடுத்த 10 ஆண்டுகளில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை 23.98%ல் இருந்து 33% ஆக உயர்த்தும் நோக்கத்துடன், தமிழ்நாடு அரசின் லட்சியமான ‘பசுமை தமிழ்நாடு’ திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு மாநிலம் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 60 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இதில் தற்போது 31 ஆயிரத்து 194 சதுர கிமீ பரப்பளவு ( மொத்த பரப்பில் 23.98 சதவீதம்) மட்டுமே பசுமை போர்வை உள்ளது. கடந்த 1988-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய வனக் கொள்கையின்படி ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 33 சதவீதம், அதாவது தமிழகத்தில் 42 ஆயிரத்து 919 சதுர கிமீ பரப்பளவில் பசுமை போர்வை இருக்க வேண்டும்.

image

இந்த இலக்கை எட்ட தமிழ்நாடு மேலும் 13 ஆயிரத்து 500 சதுர கிமீ பரப்பளவு (மொத்த பரப்பில் 9 சதவீதம்) பசுமை போர்வையை உருவாக்க வேண்டியுள்ளது. இந்த இலக்கை அடுத்த 10 ஆண்டுகளில் எட்டுவதற்காக ‘பசுமை தமிழ்நாடு’ இயக்கம் தொடங்கப்படும் என்று நடப்பாண்டு மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.அதற்கான நிர்வாக அனுமதி மற்றும் ரூ.38 கோடியே 80 லட்சத்துக்கான நிதியை ஒதுக்கீடு செய்து, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ இன்று அரசாணை பிறப்பித்துள்ளார்.

அதில், பட்ஜெட்டில் அறிவித்த பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்க நிர்வாக அனுமதி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 265 கோடி உள்நாட்டு வகையை சேர்ந்த மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதற்காக 2021-22 நிதியாண்டில் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 47 லட்சம் மரக்கன்றுகளை உருவாக்க ரூ.21 கோடி, 2022-23 நிதியாண்டில் 1 கோடியே 30 லட்சம் மரக்கன்றுகளை உருவாக்க ரூ.17 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைப்படிக்க…ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? நீதிமன்றம் கேள்வி 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.