’புஷ்பா’ படக்குழுவிற்கு தங்க நாணயங்கள்… ரூ. 10 லட்சம் ரொக்கப் பணம் அளித்த அல்லு அர்ஜுன்

’புஷ்பா’ படக்குழுவினருக்கு தங்க நாணயங்களும் ரொக்கப் பணமும் பரிசளித்துள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன்.

’அலா வைகுந்தபுரம் லோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் ’பன்வார் சிங் ஷெகாவத் ஐபிஎஸ்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரீவள்ளி என்ற பழங்குடியினப் பெண் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இம்மாதம், 17 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் இப்படத்தின் பாடல்களும் ட்ரைலரும் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.

image

இந்த நிலையில், ’புஷ்பா’ படக்குழுவின் கடின உழைப்பால் ஈர்க்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன், அதன் முக்கியமான 35-40 உறுப்பினர்களுக்கு தலா ஒரு துலாம் (11.66 கிராம்) மதிப்புள்ள தங்க நாணயத்தை பரிசாக அளித்துள்ளார். அதுமட்டுமின்றி, அனைத்து தயாரிப்பு பணியாளர்களுக்கும் ரூ 10 லட்சம் ரொக்க பரிசாக வழங்கியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM