பாலிவுட் நடிகர்கள் கத்ரீனா கைஃப், விக்கி கௌஷல் திருமணம் ராஜஸ்தானில் பிரமாண்டமாக நடைபெற்றது.

பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபும், நடிகர் விக்கி கௌஷலும் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். அண்மையில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டனர். இருவரின் திருமணமும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் இன்று, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் அவர்களின் திருமணம் நடந்தது. அவர்களின் திருமணத்தில், பாலிவுட் பிரபலங்கள் 120க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Katrina Kaif And Vicky Kaushal Wedding Live Updates: See The Wedding Pics

விக்கி கௌஷல் மற்றும் கத்ரினா கைஃப் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை பதிவேற்றியுள்ளனர். ”அன்பும், நன்றியும் மட்டுமே எங்களை இந்த தருணத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. உங்களின் அன்பு மற்றும் ஆசியுடன் இந்த புதிய பயணத்தை நாங்கள் ஒன்றாகத் தொடங்குகிறோம்” என்று பதிவிட்டுள்ளனர். கத்ரீனாவும், விக்கியும் தங்கியிருக்கும் அறையின் ஒரு நாள் வாடகை ரூ. 7 லட்சமாம். ஆனால் கத்ரீனாவின் திருமணத்திற்கு ரிசார்ட் வாடகை எதுவும் வாங்காமல் இலவசமாக இடத்தை கொடுத்திருக்கிறதாம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.