இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இந்த வீரியமிக்க கொரோனா திரிபானது உலகளவில் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதரத்துறையினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஹாங்காங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் தனியறையில் தங்கியிருந்த இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தனித்தனி அறைகளில் தங்கியிருந்த இவர்கள் இருவரும் அறையைவிட்டு வெளியே எங்குமே செல்லவில்லை என்பதை சிசிடிவி கேமிரா மூலம் உறுதிபடுத்தியிருக்கிறது ஹோட்டல் நிர்வாகம். எனவே உணவு பெறுவதற்காக கதவைத் திறந்தபோது காற்றின் வழியாக பரவியிருக்கலாம் என்கிறது ஹாங்காங் ஆராய்ச்சி பல்கலைக்கழகம்.

image

ஒமைக்ரானின் ஸ்பைக் புரதத்தின் எண்ணிக்கையை கணக்கிட முடியாததால் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்கூட இதிலிருந்து தப்பிக்க முடியுமா என்ற கேள்வி எழும்பியிருக்கிறது. உலகம் முழுக்க கிட்டத்தட்ட 450 ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஒமைக்ரான் வகையானது தடுப்பூசியின் வீரியத்தை முறியடிக்குமா மற்றும் அதன் பரவும் வேகம் எப்படியிருக்கிறது என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சில நாட்களில் இதற்கு பதில் கிடைக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் தங்கியிருந்த இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியிருப்பது தற்போது மிகுந்த கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம்” – கமல்ஹாசன் ட்வீட் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.