‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் சீரிஸ் முடியவுள்ள நிலையில், அதன் அடுத்தப் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் மனங்களைக் கொள்ளை அடித்தது நெட் ஃப்ளிக்ஸில் வெளியான‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் சீரிஸ். இதுவரை 4 சீசன்கள் வெளியான நிலையில், இறுதிப்பாகம் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது. 4 சீசன்களின் ஒவ்வொரு எபிசோடும் ‘எபிக்’சோடுகள் என்று சொல்லும் அளவிற்கு கொண்டாடப்பட்டுள்ளதால், இறுதிப்பாகமான 5 வது சீசனுக்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எகிறிக்கிடக்கின்றன. அதேசமயம், ’மணி ஹெய்ஸ்ட்’ விரைவில் முடிகின்றதே என்ற சோகமும் ரசிகர்களை சூழ்ந்துள்ளது. அப்படிப்பட்ட வெறித்தனமான ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அடுத்தப் பாகம் குறித்த அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் ‘மணி ஹெய்ஸ்ட்’குழுவினர்.

image

‘மணி ஹெய்ஸ்ட் சீசன் 5’ வெளியாவதையொட்டி நேற்று நடந்த நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்துரையாடல் நிகழ்வில், பெர்லினாக நடித்து மறக்க முடியாத பெயராகிப்போன நடிகர் பெட்ரோ அலோன்சோ, “மீண்டும் ’மணி ஹெய்ஸ்ட்’ வருகிறது. ஒரு முடிவில்தான் தொடக்கமும் வரும். ஆனால், இது பெர்லின் கதாபாத்திரத்தின் தொடக்கக் கதையிலிருந்து வரும்” என்று உற்சாகமுடன் அறிவித்துள்ளார். இந்தத் தொடருக்கு ’பெர்லின் ஸ்பின் ஆஃப்’ என்று தலைப்பிட்டுள்ளார்கள். நெட் ஃப்ளிக்ஸில் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.


இந்தத் தகவலை ’லா காசா டி பேப்பல்’ மற்றும் நெட்ஃப்ளிக்ஸும் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பதால் ரசிகர்கள் குதூகலமடைந்துள்ளனர். மேலும், கொரிய மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ள ’மணி ஹெய்ஸ்ட்’ தொடரில் ’ஸ்க்விட் கேம்’ வெப் சீரிஸில் இறுதிவரை வந்து நடிப்பில் கவனம் ஈர்த்த பார்க் ஹே சூ தான், பெர்லின் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.