“அந்த வீட்டுக்குள் அனைவருடனும் நல்லபடியா பேசிப் பழகவே விரும்பினேன். ஆனா அங்க இருந்தவங்க என்கூட பழகத் தயக்கம் காட்டினாங்க. அது ஏன்னு இப்ப வரைக்கும் எனக்குத் தெரியலை. இன்னும் வெட்கத்தை விட்டுச் சொல்லணும்னா ராஜுவோ இமான் அண்ணாச்சியோ ஒரு மொக்க கமெண்ட் அடிச்சாலும் கைதட்டி சிரிப்பாங்க. ஆனா நான் ஒரு நல்ல பஞ்ச் பேசினா அதைக் கண்டுக்க மாட்டாங்க. அந்த நேரத்துல எப்படி வலிச்சதுனு எனக்கு மட்டுமே தெரியும். இதை வேணும்னே பண்ணினாங்களானு நீங்க அவங்களைத்தான் கேக்கணும்”

‘எப்படி இருந்தது பிக் பாஸ் அனுபவம்?’ என்ற கேள்விக்கு பிக் பாஸ் வீட்டில் சுமார் 50 நாள்களுக்கும் மேலாக இருந்து விட்டு வெளியே வந்த இசைவாணியிடம் இருந்து வந்த பதில் இது.

‘பிக் பாஸ்’ இசைவாணி

தொடர்ந்து அவரிடம் பேசினேன். “பிக் பாஸ் வாய்ப்பு வந்ததுமே இயக்குநர் அண்ணன் பா.ரஞ்சித்திடம் ‘போலாமான்ணா?’னு கேட்டேன். ‘உன் விருப்பம்டா’னு சொன்னார். வித்தியாசமான அனுபவமா இருக்குமேன்னு போனேன்.

ஆனா பிக் பாஸ் அனுபவம் ஹேப்பியானதுன்னு சொல்ல முடியல. இது ஒரு கேம் ஷோதான்னாலும், ஒவ்வொரு வாரமும் எவிக்ஷன் நடந்தா யாரை நாமினேட் செய்தேனோ அவங்ககிட்ட நானே போய் சொல்லிடுவேன். இல்லாட்டி எனக்கு அது உறுத்தலா இருக்கும். என்னுடைய இயல்பு அது.

Also Read: “இசைவாணி அக்கா அப்பாவைத் தப்பாப் புரிஞ்சிக்கிறாங்க!” – `பிக் பாஸ்’ இமானின் மகள் ஜெஃபி ஷைனி

நான் இப்படி இருந்ததால மத்தவங்களும் அப்படியேதான் இருக்கணும்னு நான் எதிர்பார்க்கலை. ஆனா தாமரை அக்கா, அண்ணாச்சி இவங்க கூட எல்லாம் எனக்கு ரொம்பவே கசப்பான அனுபவம்தான் கிடைச்சது. அண்ணாச்சி நாம ஒண்ணைச் சொன்னா காது கொடுத்து கேட்கவே மாட்டார். கேட்காமலே அது பத்தி அவர் ஒரு முடிவுக்கு வந்துடுவார். தாமரை அக்கா பண்ணதையெல்லாம் நீங்களே டிவியில் பார்த்திருப்பீங்கதானே?

பவானி ரெட்டி

போதும், ப்ரோ பேசிட்டே இருந்தா நிறையப் பேசலாம். ஆனா வேண்டாம். கமல் சாருடைய பிரபல டயலாக் ஒண்னு இருக்கே, போங்கடா, போய் புள்ள குட்டிகளைப் படிக்க வைங்கடான்னு!

அதேதான். பிக் பாஸ் முடிச்சு வந்தாச்சு இனி அடுத்த‌ வேலையைப் பார்ப்போம்” என முடித்துக் கொண்டார் இசை.

முழு பேட்டி சினிமா விகடன் யூடியூப் சேனலில்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.