எதிர்வரும் ஐபிஎல் 2022 சீசனை முன்னிட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த முறை மொத்தம் பத்து அணிகள் ஐபிஎல் அரங்கில் கிரிக்கெட் விளையாட உள்ளன. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளன. 

image

இந்த நிலையில், தற்போது உள்ள 8 அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்களில் அதிகபட்சம் 4 பேரை மட்டுமே ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக் கொள்ள முடியும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. அதனை அறிவிக்க ஒரு கெடுவும் விதித்திருந்தது பிசிசிஐ. தற்போது அந்த கெடு நிறைவடைந்துள்ளது. 

அதிகாரபூர்வமாக எந்தெந்த வீரர்கள் எல்லாம் தக்கவைக்கப்பட்டு உள்ளார்கள் என்பதை பார்ப்போம்…

image

மும்பை இன்டியன்ஸ்!

ரோகித் ஷர்மா (16 கோடி),

ஜஸ்ப்ரீத் பும்ரா (12  கோடி),

சூர்யகுமார் யாதவ் (8 கோடி)

மற்றும் பொல்லார்ட் (6 கோடி – வெளிநாட்டு வீரர்)

image

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

ரசல் (12 கோடி – வெளிநாட்டு வீரர்),

வருண் சக்கரவர்த்தி (8 கோடி),

வெங்கடேஷ் ஐயர் (8 கோடி),

சுனில் நரைன் (6 கோடி – வெளிநாட்டு வீரர்)

image

ராஜஸ்தான் ராயல்ஸ்!

சஞ்சு சாம்சன் (14 கோடி),

ஜாஸ் பட்லர் (10 கோடி – வெளிநாட்டு வீரர்),

யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (4 கோடி)

image

பஞ்சாப் கிங்ஸ்!

மயங்க் அகர்வால் (12 கோடி)

மற்றும் அர்ஷ்தீப் சிங் (4 கோடி). 

image

டெல்லி கேபிடல்ஸ்!

ரிஷப் பண்ட் (16 கோடி),

அக்சர் பட்டேல் (9 கோடி),

பிருத்வி ஷா (7.5 கோடி),

ஆன்ரிச் நோர்க்யா (6.5 கோடி – வெளிநாட்டு வீரர்)

image

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்!

விராட் கோலி (15 கோடி),

முகமது சிராஜ் (7 கோடி)

மற்றும் மேக்ஸ்வெல் (11 கோடி – வெளிநாட்டு வீரர்)

image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

கேன் வில்லியம்சன் (14 கோடி – வெளிநாட்டு வீரர்),

அப்துல் சமாத் (4 கோடி),

உம்ரான் மாலிக் (4 கோடி)

image

சென்னை சூப்பர் கிங்ஸ்!

ரவீந்திர ஜடேஜா (16 கோடி),

மகேந்திர சிங் தோனி (12 கோடி),

ருதுராஜ் கெய்க்வாட் (6 கோடி),

மொயின் அலி (8 கோடி – வெளிநாட்டு வீரர்)

இதையும் படிக்கலாம் : டிஜிட்டல் உலகை ஆளும் இந்தியர்கள்! சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா வழியில் பரக் அகர்வால்! 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.