கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்.

கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு 8 மணியளவில் உயிர் பிரிந்ததாக அவரது மகன் தகவல் தெரிவித்துள்ளார்.

image

நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் இதுவரை தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்தவர். அஜித்தின் ‘வரலாறு’ படத்திற்கும் இவர்தான் நடனம் அமைத்தார். மேலும், தனுஷின் ‘திருடா திருடி’ படத்தில் இடம்பிடித்த ‘மன்மதராசா’ பாடலுக்கும் நடனம் அமைத்தவர் இவரே.

சூப்பர் ஹிட் அடித்த ராஜமெளலி – ராம் சரணின் ‘தீரா தீரா தீரா’ பாடலுக்கு நடனம் அமைத்து தேசிய விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ’வரலாறு’, ‘பரதேசி’, ’அரண்மனை’, ’கஜினிகாந்த்’ உள்ளிட்டப் பல்வேறு படங்களில் நடித்தவர் சந்தானத்தின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் மேலும் கவனம் ஈர்த்தார்.

image

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவரது மருத்துவ சிகிச்சைகளுக்கு போதிய பணம் இல்லாததால், அவரது மகன் அஜய் கிருஷ்ணா திரை பிரபலங்கள் உதவுமாறு கோரிக்கை வைத்து இருந்தார். நடன இயக்குநர் சிவசங்கர் சிகிச்சைக்கு சோனு சூட் உதவுவதாக உறுதி அளித்து இருந்தார். அதேபோல், நடிகர் தனுஷும் அவரது சிகிச்சைக்கு தொகை ஒன்றினை அளித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.