கொரோனா வைரஸ் வரிசையில் டெல்டாவுக்கு அடுத்ததாக தெரிய வந்துள்ள ஒமைக்ரானுக்கு எதிராக தங்கள் தடுப்பு மருந்துகள் வேலை செய்யுமா என்பதை உறுதியாக கூற இயலவில்லை என பிரபல மருந்து நிறுவனங்களான ஃபைசர் மற்றும் பயான்டெக் தெரிவித்துள்ளன.

தென்ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்ற உருமாறிய கொரோனாவை உலக அளவில் இப்போது சந்தையில் கிடைக்கும் தடுப்பூசி மற்றும் மருந்துகள் தடுக்கும் வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அறிக்கை வெளியிட்டிருக்கும் இந்த இரண்டு நிறுவனங்களும், தங்கள் தடுப்பு மருந்து குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளன. ஆனால், ஒமைக்ரான் கொரோனாவுக்கு எதிராக 100 நாட்களில் தடுப்பு மருந்தை கண்டறிந்து விடுவோம் என்று தெரிவித்துள்ளதாக ரஷ்யாவின் ஸ்புட்நிக் அறிவியல் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஓமைக்ரானின் வீரியம் மற்றும் இப்போதுள்ள தடுப்பு மருந்துகள் அதைத் தடுக்குமா என்ற முழு விவரம் 4 வார ஆராய்ச்சிக்குப் பிறகே தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

image

இதற்கிடையே, புதிய உருமாறிய கொரோனா அதற்குள் ஜெர்மனி, பிரிட்டனில் தலா இருவர் மற்றும் இத்தாலியில் ஒருவருக்கு கண்டறியப்பட்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. முன்னெச்சரிக்கையாக தென்ஆப்ரிக்கா, போஸ்ட்வானா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளுக்கு விமான போக்குவரத்தை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தடை செய்துள்ளன.

ஜப்பான், இஸ்ரேல், துருக்கி, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அமீரக குடியரசு நாடுகளும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆனால், புதிய உருமாறிய கொரோனாவைக் கண்டுபிடித்து அறிவித்ததற்கு உலக நாடுகள் தங்கள் நாட்டிற்கு கொடுத்த தண்டனையா இது என தென்ஆப்ரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது.

ஒமைக்ரான் கொரோனா இவ்வாறு உலக நாடுகளை மிரட்டத் தொடங்கியுள்ள நிலையில், அதன் பெயர் காரணத்திலும் ஒரு முக்கிய சம்பவம் நடந்திருக்கிறது. கிரேக்க எழுத்துகள் வரிசையில் கொரோனா உருமாற்றங்களுக்கு பெயரிடப்பட்டு வரும்நிலையில், புதிய வகைக்கு நூ அல்லது ஷி என்றுதான் பெயரிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நூ என்பதன் உச்சரிப்பு NEW என்று வருவதாலும், ஷி என்பது சீன அதிபர் ஷி ஜின்பிங்கை குறிப்பதாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.