‘நேஷனல் ஜியோகிராஃபிக்’ இதழில் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் பெண்ணுக்கு இத்தாலி அரசு அடைக்கலம் அளித்துள்ளது.

1985 ஆம் ஆண்டு ‘நேஷனல் ஜியோகிராஃபிக்’ இதழின் அட்டைப்படத்தில் ஆப்கானிய பெண் ஒருவர் இடம்பெற்றிருந்தார். அந்த புகைப்படம் வெளியானதையடுத்து, அந்த பெண்ணுக்கு இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகியால் (Mario Draghi) அகதி அந்தஸ்து வழங்கியதாக இத்தாலிய அரசாங்க செய்தி அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Sharbat Gula pictured in Kabul, Afghanistan, in November 2016.

அந்த அட்டைப்படத்தில் இடம்பெற்றவர், 12வயதான ஷர்பத் குலா (Sharbat Gula). ஆப்கானின் பஸ்தூன் இனத்தைச்சேர்ந்த தாய், தந்தையரை இழந்தவர், ஆப்கன் – பாகிஸ்தான் எல்லையில் இருந்த அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். 1984 இல் எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் அடுத்த ஆண்டு நேஷனல் ஜியோகிராஃபிக் இதழில் வெளியிடப்பட்டது.

பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் வசிக்கும் ஷர்பத் குலாவின் பெயர் யாருக்கும் தெரியாத நிலையில், பல தசாப்தங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. 40 வயதையொட்டிய அவர் ரோமை வந்தடைந்துள்ளதாக இத்தாலியன் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 1980களில் அமெரிக்க புகைப்படக் கலைஞர் ஸ்டீவ் மெக்கரி எடுத்த புகைப்படத்தால் அவர் உலக அளவில் பிரபலமான அகதியாக அடையாளம் காணப்பட்டார். ஆப்கானில் உள்ள என்ஜிஓ ஒன்றின் மூலம் ஷர்பத் குலா இத்தாலிக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.