தனுஷின் பாலிவுட் படமான ’அட்ராங்கி ரே’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ், இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் முதன் முதலில் பாலிவுட்டில் அறிமுகமானார். அதற்கடுத்ததாக, அமிதாப் பச்சன், அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் பால்கி இயக்கத்தில் வெளியான ‘ஷமிதாப்’ படத்தில் வாய்பேசாத கலைஞனாக அசத்தினார் தனுஷ். தற்போது, மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ’அட்ராங்கி ரே’ படத்தில் அக்‌ஷய் குமார், சாரா அலிகானுடன் தனுஷ் நடித்துள்ளார்.

இப்படத்தின், படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கு தயாராய் இருக்கும் நிலையில், ‘அட்ராங்கி ரே’ நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது என்று படக்குழு காலையில் புதிய போஸ்டருடன் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

image

அதனையொட்டி தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. டிரெய்லர் முழுக்க தனுஷ் ஆக்கிரமித்து தமிழராக நடித்திருந்தாலும் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே தமிழில் பேசுகிறார். முழுக்க முழுக்க இந்தியிலேயே டிரெய்லரில் தனுஷ்,சாரா அலிகான், அக்‌ஷய் குமார் பேசுகிறார்கள்.

ட்ரெய்லரில் முதலில் பின்னணி இசை மிகவும் அற்புதமாக உள்ளது. துள்ளல், சோகம் என உணர்வுகளை அழகாக இசை வெளிப்படுத்துகிறது. ட்ரெய்லரின் மிகவும் கலர்புல்லாக இருக்கிறது. ட்ரெய்லரின் தொடக்கத்தில் தனுஷை யாரோ மூட்டையில் கட்டி ஒரு வீட்டிற்கு தூக்கி வருகிறார்கள். அவிழ்த்துவிடப்பட்ட மூட்டையில் இருந்து வெளியே வரும் தனுஷ், என்ன ஏண்டா தூக்கிட்டு வந்திங்க என அசிங்க அசிங்கமா தமிழில் திட்டுகிறார். தொடங்கும்போதே சென்னையில் அதிகமாக புழக்கத்தில் இருக்கும் அந்த அசிங்கமான வார்த்தையுடன் தான் ஆரம்பிக்கிறார். தனுஷுக்கு சாராகானை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை. அவர்கள் சந்தோஷமாக இல்லை. உன்னை என் தலையில் கட்டிவிட்டார்கள் என்று ரயில் தனுஷ் ஆதங்கத்தை தமிழில் கொட்டுவார். இருவரும் பிரிந்து விடுவது என்று முடிவெடிக்கிறார்கள்.

சாரா கானின் காதலனாக வருகிறார் அக்‌ஷய் குமார். அவர் அறிமுகமே அசத்தாக இருக்கிறது. யானை மேல் வந்து தூம்பிக்கையின் வழியாக கெத்தாக கீழே இருக்கிறார். அவரது கைகளில் பலூன்கள் இருக்கிறது. அவர் ஒரு மேஜிக் மேனாக நடித்திருக்கிறார். பிரிந்துவிடுவது என்று முடிவெடுத்த பின்னர் தனுஷ் – சாரா இடையே காதல் மலர்கிறது. அதனால், சாரா அலிகான் குழம்பி போகிறார். இருவரையும் விரும்புவதாக தனுஷிடமே சொல்கிறார். ட்ரெய்லரின் பாதியில் இருந்து உணர்வுபூர்வமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தனுஷின் அனுபவம் வாய்ந்த நடிப்பு நம்மையும் அவரப்போலவே அழ வைக்கிறது. இதுஒரு முக்கோண காதல் கதை.. ட்ரெய்லரை ஏ.ஆர்.ரகுமானின் இசையே தாங்கி நிற்கிறது.

சப் டைட்டிலும் போடாததால் என்ன பேசுகிறார்கள் என்பது புரியவில்லை என்று நெட்டிசன்கள் கருத்திட்டு வருகிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.