சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் குறைந்துள்ளது ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
தீபாவளி பண்டிகைக்கு முந்தைய வார இறுதி நாட்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 75 இடங்களில் 6130 தனி நபர்களிடம் ஐசிஎம்ஆர் நடத்திய சர்வே முடிவின் விபரம் பின்வருமாறு: 
 
▶️ தெருக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற குடிசை பகுதிகள் அருகிலுள்ள வெளிப்புற பொது இடங்களில் 32% பேர் சரியாக முகக்கவசம் அணிகிறார்கள். மற்ற வெளிப்புற பொது இடங்களில் 35% பேர் சரியாக முகக்கவசம் அணிகிறார்கள்.
 
image
▶️ மளிகைக் கடைகள், மருந்துக் கடைகள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற உட்புற பொது இடங்களில் குடிசைப் பகுதிகளில் 14% பேரும், மற்ற இடங்களில் 21% பேரும் முகக்கவ்சம் அணிகிறார்கள்.
 
▶️ வணிக வளாகங்களுக்கு வரும் மக்களில் 57% பேர் முகக்கவசம் அணிந்து வருகிறார்கள். மற்றவர்கள் அணிவதில்லை.
 
▶️ கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டதும் முகக்கவசம் அணியும் பழக்கம் பொதுமக்கள் மத்தியில் பரவலாக தென்பட்டாலும், போகப்போக அப்பழக்கம் குறைந்து விட்டது.
 
▶️ சென்னையில் 54 சதவிகிதத்தினர் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியிருக்கிறார்கள். 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.