ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்சர் ஒருவர் சாலையின் தரத்தை பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் கன்னங்களுடன் ஒப்பிட்டு பேசி உள்ள விவகாரம் தேசிய அளவில் வைரலாகி வருகிறது. அதுவும் இதனை மக்கள் திரளாக கலந்து கொண்ட கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார். 

image

ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அண்மையில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்து. அந்த மாற்றத்தின் மூலம் அமைச்சரான உதய்பூர்வதி சட்டமன்ற தொகுதி உறுப்பினரான ராஜேந்திர சிங் குத்தா இதனை தெரிவித்துள்ளார். 

கூட்டத்தில் பங்கேற்ற அவரிடம் அங்கு குழுமியிருந்த மக்கள் சிலர் சாலையின் நிலை குறித்து புகார் அளித்துள்ளனர். அதை தொடர்ந்து பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளரை பார்த்த அவர், “எனது தொகுதியில் சாலைகள் நடிகை கத்ரினா கைஃப் கன்னங்களை போல இருக்க வேண்டும்” என சொல்கிறார். 


இது தான் இப்போது வைரலாகி வருகிறது. அவருக்கு ஊரக வளர்ச்சித் துறை உட்பட சில துறைகளின் இலாகா ஒதுக்கப்பட்டு, அமைச்சராகி உள்ளார். 

இதற்கு முன்பு 2000ம் ஆண்டில் லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் இருந்த போது பீகாரின் சாலைகள் ஹேம மாலினியின் கன்னங்களை போல் பளபளப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்து இருந்தார். அந்த வரிசையில் தற்போது ராஜஸ்தான் அமைச்சரும் கமெண்ட் செய்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.