உலக அளவில் பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளங்களில் ஒன்று ட்விட்டர். பிரபலங்கள், ஆளுமைகள், சாமானியர்கள் என அனைவரும் ட்விட்டர் மூலமாக தங்களது கருத்துகளை சுருக்கமாக சொல்லி வருகின்றனர். இந்த நிலையில் ட்விட்டரின் ‘டிப்ஸ்’ அம்சம் தற்போது ஆண்ட்ராய்ட் பயனர்களும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்துள்ளது ட்விட்டர் நிறுவனம். 

image

அதென்ன டிப்ஸ் அம்சம்?

ட்விட்டரில் தரமான கன்டென்டுகளை பயனர்கள் பகிர்வது வழக்கம். அதற்காக கடுமையான உழைப்பை அவர்கள் செலுத்தி இருப்பார்கள். போட்டோ, டெக்ஸ்ட், வீடியோ என எதுவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம். வழக்கமாக அதை பார்க்கின்ற பயனர்கள் அதற்கு லைக் கொடுப்பது, கமெண்ட் செய்வது, ரீ-ட்வீட் செய்வது என வெறுமனே பாராட்டுவதோடு கடந்து விடுவார்கள். ஆனால் இந்த டிப்ஸ் அம்சத்தின் மூலம் தரமான கன்டென்டை கொடுத்தவருக்கு சன்மானம் கொடுக்கலாம். அதாவது ஆன்லைன் மூலமாக பண பரிமாற்றத்தை மேற்கொள்ள இந்த டிப்ஸ் அம்சம் அனுமதிக்கிறது. பணமாக மட்டுமல்லாது கிரிப்டோகரன்சியாகவும் ஒரு பயனர் மற்றொரு பயனருக்கு அனுப்ப வழிவகை செய்கிறது ‘டிப்ஸ்’. இதற்கென பேமெண்ட் தளங்களை லிங்க் செய்துள்ளது ட்விட்டர். 

இந்த அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

டிப்ஸ் அம்சத்தை பயன்படுத்த விரும்பும் பயனர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் உள்ள ‘Edit Profile’ லிங்கை க்ளிக் செய்த பின்னர் கீழ் புறமாக ஸ்க்ரால் செய்ய வேண்டும். அதில் ‘டிப்ஸ்’ என்ற டேக் இருக்கும். அதை க்ளிக் செய்து தனியுரிமைக் கொள்கையை ‘Allow’ செய்தால் டிப்ஸ் அம்சத்தை பயன்படுத்த தொடங்கலாம். இதில் பரிமாற்றம் மேற்கொள்ள பணம் அனுப்புபவர் மற்றும் பெறுபவர் என இருவரும் டிப்ஸ் அம்சத்தை பயன்படுத்த வேண்டும். 

image

இப்போதைக்கு இந்த டிப்ஸ் அம்சம் பத்திரிகையாளர்கள், கிரியேட்டர்கள் என குறுகிய ட்விட்டர் பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.