சையத் முஷ்தாக் அலி தொடரின் இறுதிப்போட்டி பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. தமிழ்நாடும் கர்நாடகாவும் மோதிய இந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி கடைசி பந்து வரை சென்று 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது. கடைசி பந்தில் சிக்சர் அடித்து ஷாரூக்கான் தமிழ்நாட்டை சாம்பியனாக்கியிருக்கிறார்.

விஜய் சங்கர்

தமிழ்நாடு Vs கர்நாடகா ரைவல்ரி பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. இரண்டு அணிகளும் எப்போது மோதினாலுமே அனல் பறக்கும். இதே சையத் முஷ்தாக் அலி தொடரில் 2019 ஆம் ஆண்டு சீசனில் இரண்டு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதியிருந்தன. அந்த போட்டியில் தமிழ்நாடு அணி 1 ரன் வித்தியாசத்தில் தோற்று ஏமாற்றமடைந்திருக்கும். அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த போட்டி அமைந்திருந்தது.

சையத் முஷ்தாக் அலி, விஜய் ஹசாரே போன்ற லிமிட்டெட் ஓவர் தொடர்களில் இறுதிப்போட்டிகளில் 100% சக்சஸ் ரேட்டை கர்நாடகா வைத்திருக்கிறது. 6 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி 6 முறையும் சாம்பியன் ஆகியுள்ளது.

ரெக்கார்டுகள் எல்லாம் கர்நாடகாவுக்கு சாதகமாக இருந்தாலும் இந்த தொடரில் கர்நாடகாவை விட தமிழ்நாடு சிறப்பாகவே ஆடியிருந்தது.

தமிழ்நாடு நேரடியாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி, காலிறுதி மற்றும் அரையிறுதியில் எந்த தடுமாற்றமும் இல்லாமல் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. ஆனால், கர்நாடகா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆடி காலிறுதி அரையிறுதியில் தட்டுத்தடுமாறி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு கேப்டனான விஜய் சங்கரே டாஸை வென்று சேஸிங்கை தேர்வு செய்தார். மனீஷ் பாண்டே தலைமையிலான கர்நாடகா அணி முதல் பேட்டிங்.

20 ஓவர்களில் கர்நாடகா அணி 151 ரன்களை எடுத்தது. ஆனால், தொடக்கத்தில் இவ்வளவு ரன்கள் வருமென யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் கர்நாடகா அப்படி தடுமாறியிருந்தது. பவர்ப்ளே 6 ஓவர்களில் 32 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

பவர்ப்ளேயில் 3 ஓவர்களை வீசிய சாய் கிஷோர் 9 ரன்களை மட்டுமே கொடுத்து கடம் மற்றும் மனீஷ் பாண்டேவின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

சஞ்சய் யாதவ் கருண் நாயரின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இருவரின் சுழலிலும் சிக்கி கர்நாடகா மீள முடியாமல் தவித்தது.

சரத் மற்றும் அபினவ் மனோகர் கூட்டணி 55 ரன்களை சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டது. இந்த கூட்டணியையும் சாய் கிஷோர் சைலண்ட்டாக முறித்துவிட்டார். சரத் 16 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஓவர்கள் செல்ல செல்ல கர்நாடகா கொஞ்சம் சிறப்பாக ஆடியது. தமிழகத்தின் டெத் ஓவர் ரொம்பவே சுமாராக இருந்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் 55 ரன்களை கொடுத்திருந்தனர். நடராஜன் மற்றும் சந்தீப் வாரியர் இருவரும் வீசிய கடைசி 3 ஓவர்களில் மட்டும் 42 ரன்கள் சென்றிருந்தது. அபினவ் மனோகர், ப்ரவீன் துபே இருவரும் அதிரடியாக ஆடியிருந்தனர். இதனால் அணியின் ஸ்கோர் 151 ஆக உயர்ந்தது.

தமிழ்நாட்டிற்கு டார்கெட் 152. தமிழ்நாடும் பயங்கரமாக தடுமாறவே செய்தது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஹரி நிஷாந்தையும் ஜெகதீசன் ரன் அவுட் ஆக்கிவிட்டார். சாய் சுதர்சனும் சோபிக்கவில்லை. இதன்பிறகு,

ஜெகதீசனுடன் கேப்டன் விஜய் சங்கர் கூட்டணி சேர்ந்தார். இவர்கள் நீண்ட நேரம் நின்றாலும் தடுமாறவே செய்தனர். இவர்களால் பவுண்டரிக்களே அடிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட 8 ஓவர்களுக்கு தமிழ்நாடு அணி பவுண்டரியே அடிக்காமல் இருந்தது.

இதனால் ரன்ரேட் எகிறியது. கடைசி 5 ஓவர்களில் 57 ரன்கள் தேவைப்பட்டது. அடிக்க வேண்டும் அல்லது அடுத்தவருக்கு வழி விட வேண்டும் என்ற சூழலில் ஜெகதீசனும் விஜய் சங்கரும் இரண்டாவது ஆப்சனை தேர்வு செய்தனர். கரியப்பா வீசிய 16 வது ஓவரில் அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் இருவரும் தூக்கியடித்து கேட்ச் ஆகினர். ஷாரூக்கான் உள்ளே வந்தார். இந்த சமயத்தில் அணியின் ஒற்றை நம்பிக்கையாக அவர் மட்டுமே இருந்தார். எதிர்பார்த்ததை போலவே சிக்சரையும் பவுண்டரியையும் அடித்து 12 பந்துகளில் 24 ரன்கள் அடித்து போட்டியை நெருக்கமாக கொண்டு வந்தார்.

ப்ரதீக் ஜெயின்

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற பரபரப்பான நிலைக்கு போட்டி நகர்ந்தது. ப்ரதீக் ஜெயின் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தை சாய் கிஷோர் பவுண்டரி அடிக்க, அடுத்த நான்கு பந்துகளும் எக்ஸ்ட்ரா மற்றும் ஓட்டங்களால் கழிந்தது. கடைசி பந்தில் 5 ரன் அடிக்க வேண்டிய சூழல். ஸ்ட்ரைக்கில் ஷாரூக்கான் நிற்கிறார். ப்ரதீக் ஓவர் தி விக்கெட்டில் வந்து லெக் ஸ்டம்பில் நச்சென ஒரு யார்க்கரை இறக்க நினைக்கிறார். ஆனால், அது தவறிப்போய் ஸ்லாட்டில் விழவே நொடியும் தாமதமின்றி ஷாரூக்கான் அந்த பந்தை விண்ணுக்கு பறக்கவிட்டார்.

Yeah! It’s a SIXER!! தமிழ்நாடு சாம்பியன் ஆனது. ஷாரூக்கான் 15 பந்துகளில் 33 ரன்களை அடித்து சூப்பர் ஹீரோவாக மாறியிருந்தார்.

தமிழ்நாடு

தமிழ்நாடு தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் ஒட்டுமொத்தமாக மூன்றாவது முறையும் சையத் முஷ்தாக் அலி கோப்பையை வென்றது. கர்நாடகா இதுவரை இறுதிப்போட்டியில் தோற்றதே இல்லை எனும் ரெக்கார்ட் உடைக்கப்பட்டது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.