என் வயது 45. கடந்த ஒரு வருடமாக அதிக ப்ளீடிங் இருக்கிறது. அது ஒருவாரம்வரை நீடிக்கிறது. மருத்துவர் என்னைப் பரிசோதித்துப் பார்த்த பிறகு கர்ப்பப்பையை நீக்க வேண்டும் எனச் சொல்கிறார். இந்த வயதில் கர்ப்பப்பையை நீக்குவது சரியானதா? அதை நீக்கியதால் பிறகு வேறு பிரச்னைகள் வருமா?

– பைரவி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

உங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் அதிக ரத்தப் போக்குக்கான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும். ஸ்கேன் செய்து பார்த்து ஃபைப்ராய்டு கட்டிகள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். அடுத்து அடினோமயோசிஸ் பாதிப்பு இருக்கிறதா என்றும் கண்டறிய வேண்டும். அடினோமயோசிஸ் (Adenomyosis) என்றால் கர்ப்பப்பை வழக்கத்தைவிட சற்று வீங்கியிருப்பது. பெண்களுக்கு ஒவ்வொரு மாதவிடாயின்போதும் எண்டோமெட்ரியம் என்கிற லைனிங் உதிர்ந்து வெளியே வருகிறது. அதைத்தான் மாதவிடாய் சுழற்சி என்கிறோம். சில பெண்களுக்கு இந்த எண்டோமெட்ரியமானது, கர்ப்பப்பையின் தசைகளுக்கு நடுவில் வளர ஆரம்பிக்கும். அதுதான் அடினோமயோசிஸ். ஒவ்வொரு மாதவிடாயின் போதும் எண்டோமெட்ரியம் லைனிங் உதிர்ந்து வெளியே வருவது போல, கர்ப்பப்பை தசைகளுக்கு நடுவிலுள்ள பகுதியால் உதிர்ந்து வெளியே வர முடியவில்லை.

Also Read: கர்ப்பப்பை நீக்கம் ஆபத்தா ? Things to Know Before Hysterectomy | Gynaecologist Explains | Say Swag

அதனால்தான் இந்தப் பாதிப்புள்ள பெண்களுக்கு கர்ப்பப்பை பெரிதாகிறது. மாதவிடாயின்போது வலியும், அதிக ரத்தப்போக்கும் இருக்கும். மூன்றாவதாக, கர்ப்பப்பையின் லைனிங்கான எண்டோமெட்ரியம் பகுதியில் ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்றும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு டி அண்ட் சி செய்து பார்க்கலாம்.

மேற்கூடிய பிரச்னைகளை எல்லாம் பார்த்துவிட்டு உங்கள் மருத்துவர் கர்ப்பப்பையை நீக்குவதுதான் ஒரே தீர்வு என்று முடிவெடுக்கிறாரா எனப் பாருங்கள். அப்படி முடிவுசெய்யப்பட்டால், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை முறையிலோ, வயிற்றைத் திறந்து செய்யப்படுகிற அறுவை சிகிச்சை முறையிலோ கர்ப்பப்பையை நீக்கலாம். கர்ப்பப்பை நீக்க அறுவைசிகிச்சைக்குப் பிறகான குணமடையும் காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். குறைந்தபட்சம் 2 வாரங்களுக்காவது உங்களுக்கு உதவிக்கு ஆட்கள் தேவைப்படுவார்கள். எழுந்து நடப்பது, பாத்ரூம் செல்வது, குளிப்பது போன்ற உங்கள் வேலைகளை நீங்களே பார்த்துக்கொள்ளலாம்.

Woman (Representational Image)

Also Read: Doctor Vikatan: குழந்தை பெற்று இரண்டு வருடங்களுக்குப் பிறகும் வடியாத வயிறு; குறைக்க வழிகள் உண்டா?

மற்றபடி பிற வேலைகளை உங்களால் செய்ய முடியாது. நான்கைந்து வாரங்களுக்குப் பிறகு, மெள்ள மெள்ள மற்ற வேலைகளையும் செய்யத் தொடங்கலாம். இரண்டு மாதங்களுக்குப் பிறகு வாக்கிங், சைக்கிளிங் உள்ளிட்ட பயிற்சிகளைச் செய்யலாம். கர்ப்பப்பையோடு ஓவரீஸ் எனப்படும் சினைப்பைகளையும் இளம் வயதில் அகற்ற மாட்டோம். அந்த சினைப்பைகள்தான் பெண்களுக்கான ஹார்மோனான ஈஸ்ட்ரோஜெனை கொடுப்பவை. மெனோபாஸ் வயதுவரை சினைப்பைகளிலிருந்து ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கும். எனவே, சினைப்பைகளில் எந்தப் பிரச்னையும் இல்லாதபட்சத்தில் அவற்றை விட்டுவிட்டு, கர்ப்பப்பையை மட்டும் நீக்கிக்கொள்ளலாம்.”

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.