புதிய தலைமுறை டி டபுள்யூ எனும் புகழ்பெற்ற ஜெர்மானிய தொலைக்காட்சியுடன் இணைந்து வழங்கும், பச்சைப்பூமிக்கு பாத்தி கட்டும் காட்சி ஆவணம் ‘’ஈகோ இந்தியா’’(Eco India). இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளுக்குச் சென்று சுற்றுச்சூழல் நிலவரத்தை நேரிடையாக ஆய்ந்து காட்சிப்படுத்தியிருக்கிறது ஈகோ இந்தியா (Eco India). இந்த நிகழ்ச்சி தனிமனிதன் முதல் அரசு வரை அனைவருக்கும் உள்ள பொறுப்பை உணர்த்துகிறது. மட்டுமின்றி சுற்றுச் சூழலை மீட்டெடுக்க முயலும் பசுமைப்போராளிகளை அடையாளம் கண்டு உலகிற்குச் சொல்கிறது.

மக்கள்தொகை உயர உயர சுத்தமான குடிநீரின் தேவையும் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. கழிவுநீரை குடிநீராக மாற்றுவதே இதற்கு ஒரு தீர்வாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு செலவு அதிகம். அதேசமயம் இதை அருந்துவதில் மக்களுக்கும் தயக்கம் இருக்கிறது. புதுடெல்லியில் இயங்கும் ஒரு நிறுவனம் இதற்கு ஒரு தீர்வை கண்டுபிடித்திருக்கிறது.

டெல்லி நகரின் தாகம் தீர்க்கும் முக்கியமான நதி யமுனை. நகரின் வடபகுதியில் ஓடும்போது சற்று தூய்மையாக இருக்கிறது. ஆனால் அது டெல்லியின் தென்பகுதிக்கு வரும்போது அதன் கதை வேறுவிதமாக இருக்கிறது. ஏனென்றால் டெல்லியின் ஆலைக்கழிவு உள்ளிட்ட அனைத்துக்கழிவுகளும் யமுனையில்தான் கலக்கின்றன. டெல்லியில் பெரும் பிரச்னையே சுத்தமான குடிநீர் கிடைப்பதுதான். நீரைத் தூய்மைப்படுத்துவற்கான ஏராளமான முயற்சிகளை இங்கு மேற்கொள்கின்றனர். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, அதிக தண்ணீரை பெறுவதற்கான அவசியமும் இங்கு அத்தியாவசியமானதாகக் கருதப்படுகிறது. நகரமயமாதல் அசுரவேகத்தில் நடைபெறுவதால் அதே வேகத்துக்கு தண்ணீர் தேவையும் அதிகரித்திருக்கிறது.

image

தண்ணீர் பிரச்னையை மண்புழுக்களால் தீர்க்க முடியும். கழிவுநீரை சுத்தமாக்கும் சக்தி இயற்கையாகவே மண்புழுக்களுக்கு உண்டு. உலகின் பெரும்பாலான நாடுகளில் கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் நதியில்விடும் முறை உள்ளன. ஆனால் இதற்கு மாற்றாக ஒரு புதிய முறையும் இருக்கிறது. ஸ்மித்தா சின்ஹால் என்பவரின் வீட்டில் பெறப்பட்ட தரமற்ற குடிநீரால் எழுந்த கோபத்தில் உதித்தது ஒரு திட்டம். குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஸ்மித்தா தனது தந்தையோடு இணைந்து இந்த திட்டத்தை முன்வைத்தார். அவர் ஒரு சுத்திகரிப்பு நிலையத்தையும் உருவாக்கினார்.

Eco India : மதுரையில் பராமரிப்பற்றுக் கிடந்த 1200 குளங்களை சீர்செய்த ‘தான்’ அமைப்பு

’அப்சல்யூட் வாட்டர் ஃபெசிலிட்டி’ என்ற சூரிய சக்தியால் இயங்கும் இந்த சுத்திகரிப்பு நிலையம், தினமும் சுமார் ஒரு லட்சம் லிட்டர் நீரை சுத்திகரித்து சுத்தமான குடிநீராக மாற்றுகிறது. அத்தோடு நதியை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது. சுற்றுவட்டார மாவட்டங்களிலுள்ள கழிவுநீர் தண்ணீர் லாரிகளின் மூலம் எடுத்துவரப்பட்டு அதிலுள்ள குப்பைகள் மற்றும் பிளாஸடிக் துகள்கள் வடிகட்டப்படுகிறது. பின்னர் மரத்துண்டுகள், மணல் மற்றும் கூழாங்கற்கள் அடங்கிய ஐந்தடுக்குக்கொண்ட உயிரி வடிகட்டி மூலம் சுத்திகரிக்கப்படுகிறது. இந்த இடத்தில்தான் மண்புழுக்கள் மாசை நீக்கும் பணிகளைச் செய்கின்றன.

image

பின்னர் நேநோ சுத்திகரிப்பு தொழில்நுட்பம் மூலம் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு உயர்தரமிக்க குடிநீராக மாற்றப்படுகிறது. இந்தமுறை தண்ணீர் உலக சுதாகார நிறுவனத்தின் தரத்தைக் கொண்டிருக்கிறது. இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் ஒரு மணிநேரத்தில் 4000 லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்க முடிகிறது. ஆனால் இந்த தொழில்நுட்பத்தை நிறுவுவதற்கான தொழில்நுட்பச் செலவு அதிகம். அதேசமயம் இதற்கான நடைமுறைச்செலவுகள் மரபுவழி கழிவு சுத்திகரிப்பு நிலையங்களைவிட குறைவாக இருப்பதால் கொள்முதல்விலை ஈடு செய்யப்படுகிறது.

image

அப்சலயூட் தண்ணீர் அமைப்பு ஏற்படுத்தியிருக்கும் பல்வேறு வசதிகளின் காரணமாக தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப் படுகிறது. ஆனால் இது டெல்லி வெளியேற்றும் கழிவுகளுடன் ஒப்பிடும்போது சிறிய பகுதிதான். ஆனாலும் 80 விழுக்காடு டெல்லிவாழ் மக்களுக்கு தேவையான சுத்தமான குடிநீர் தேவையினை எதிர்காலத்தில் நிறைவுசெய்வோம் என்று அதன் நிறுவனர்கள் உறுதியுடன் நம்புகிறன்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.