ஆப்பிள் நிறுவனம் ‘Self Service Repair’ (Do It Yourself) என்ற புதிய சேவையை தனது பயனர்களுக்கு வழங்க உள்ளது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களை பழுது நீக்கிக் கொள்ள வழி செய்கிறது இந்த புதிய சேவை. இதற்காக பொருட்களை தயார் செய்து விற்பனை செய்ய உள்ளதாகவும் ஆப்பிள் தெரிவித்துள்ளது. 

image

ஆப்பிள் வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கையேட்டை கொண்டு பழுது நீக்கலாம் என தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக சுமார் 200 பாகங்கள் மற்றும் டூல்ஸ்களை வழங்க உள்ளது. 

டிஸ்ப்ளே, பேட்டரி மாதிரியான அடிப்படையான பாகங்களை பயனர்களே மாற்றிக் கொள்ளலாம் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. இந்த சேவையில் ஆப்பிள் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 பாகங்களை பயனர்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் ‘மேக்’ சாதனங்களின் பாகங்களையும் பயனர்கள் மாற்றிக் கொள்ளும் வசதியும் கொடுக்க உள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த சேவை பயனர்களுக்கு கிடைக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. 

image

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய காண்டம் மாதிரியான உலக நாடுகள்,  பயனர்கள் Do It Yourself முறையில் அவர்களது சாதனங்களை பழுது நீக்கிக் கொள்ள தொழில்நுட்ப சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வழிகாட்டி இருந்தது. 

இதையும் படிக்கலாம் : ‘ஆப்’ இன்றி அமையா உலகு 10: Water Reminder – தண்ணீர் பருக நினைவூட்டும் அசத்தல் ஆப்! 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.