இந்தியாவின் தங்க இறக்குமதி மதிப்பு ஒரே ஆண்டில் சுமார் 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதன் பின்னணி என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

மத்திய வர்த்தக அமைச்சகம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில், நாட்டின் தங்க இறக்குமதி மதிப்பு 2,400 கோடி டாலர்களாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நடந்த இறக்குமதி மதிப்பான 680 கோடி டாலர்களை விட சுமார் 4 மடங்கு அதிகம். இப்புள்ளி விவரங்களை மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தங்கம் இறக்குமதி உயர்ந்துள்ளதால் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையும் கணிசமாக அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதி முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரே ஆண்டில் 4 மடங்கு அதிகரித்துள்ளதற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறுகிறார் ஏற்றுமதியாளர் கூட்டமைப்பின் இயக்குநர் அஜய் சஹாய். கொரோனா கட்டுப்பாடுகளால் ஆடம்பர திருமணங்கள் குறைந்துவிட்டதாகவும் அதில் மீதமான பணத்தை மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதாகவும் சஹாய் கூறியுள்ளார்.

image

மேலும் பங்குச்சந்தை முதலீடுகளில் நல்ல லாபம் கிடைத்து வருவதால் அந்த லாபத்தை வெளியே எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்து வருவதாகவும் சஹாய் கூறியுள்ளார். பண்டிகைக்காலத்தை ஒட்டி தேவை அதிகரிப்பும் தங்கம் இறக்குமதி அதிகரிக்க காரணம் என இந்திய நகை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் காலின் ஷா தெரிவித்துள்ளார். தங்கம் இறக்குமதி மதிப்பு உயர்ந்தபோதும் வெள்ளி இறக்குமதி மதிப்பு குறைந்துள்ளது. செப்டெம்பருடன் முடிந்த காலாண்டில் வெள்ளியின் மதிப்பு 15.5% குறைந்து 62 கோடி டாலராக உள்ளது என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.