ஓமன் மற்றும் அமீரகத்தில் 2021 டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இதுவரையில் நடந்துள்ள ஆறு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்துள்ள பேட்ஸ்மேன்கள் யார்? யார்? என்ற விவரத்தை பார்க்கலாம். 

image

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹிலா ஜெயவர்தனே இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மொத்தம் 31 இன்னிங்க்ஸ் விளையாடி உள்ள வர் 1,016 ரன்களை எடுத்துள்ளார். ஒரு சதம் மற்றும் ஆறு அரை சதங்கள் இதில் அடங்கும். 2007 முதல் 2014 வரையிலான டி20 உலகக் கோப்பையில் அவர் விளையாடி இந்த ரன்களை எடுத்திருந்தார். 

அவரை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் (920 ரன்கள்), இலங்கை வீரர் தில்ஷன் (897 ரன்கள்), இந்திய அணியின் கேப்டன் கோலி (777 ரன்கள்), தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் (717 ரன்கள்) எடுத்துள்ளனர். 

image

இந்திய கேப்டன் கோலி 16 இன்னிங்ஸ் மட்டுமே விளையாடி 777 ரன்களை எடுத்துள்ளார். அதில் 9 அரை சதங்கள் அடங்கும். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் 26 இன்னிங்ஸ் மற்றும் அதற்கும் மேலாக விளையாடி இந்த ரன்களை எடுத்துள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.