சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூ ப்ளசிஸ் என இருவரும் ஐபிஎல் 2021 சீசனில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். ருதுராஜ் 635 ரன்களும், டூ ப்ளசிஸ் 633 ரன்களும் குவித்திருந்தனர். 

image

இதில் டூ ப்ளசிஸ் கொல்கத்தாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 86 ரன்களை குவித்து அணியை சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். இந்நிலையில் தன்னுடன் தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் ருதுராஜ் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலைத்தளம் வெளியிட்டுள்ள வீடியோ மூலமாக பகிர்ந்துள்ளார் டூ ப்ளசிஸ். அப்போது சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் உடன் இருந்தார். 

“ருதுராஜ் ஒரு சாம்பியன். அவரது திறன் மிகவும் அபாரமானது. அதனால் நானும் எனது ரோலை அழுத்தமின்றி செய்ய முடிந்தது. அவருக்கும் இதன் மூலம் நல்ல அனுபவம் கிடைத்திருக்கும். 

image

இந்த சீசன் எனக்கு ரொம்பவே முக்கியமான சீசன். சென்னை அணியுடன் நான் செலவிட்டுள்ள நேரம் பொன்னானது. அது எனது சிறப்பான ஆட்டத்தை கொண்டு வரவும் உதவியது. அதோடு அணியின் சக வீரர்களும் முன்னின்று தங்களது ஆட்டத்திறனை வெளிப்படுத்தியது அற்புதம். 

பிராவோ உறுதுணையாக இருந்தார். இப்படி ஒரு சிறப்பான அணியை அமைத்த பெருமை பயிற்சியாளரான உங்களுக்கும் (ஸ்டீபன் பிளம்மிங்) மற்றும் கேப்டன் தோனியை மட்டுமே சேரும்” என அவர் தெரிவித்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.