தொடர் விடுமுறையையொட்டி மக்கள் வெளியூர் செல்வதால் சென்னையில் இன்றிரவு 12 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‘சென்னை மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ இன்று (13.10.2021) நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன. தொடர்‌ விடுமுறை நாட்களை ஒட்டி வெளியூர்‌ செல்லும்‌ பயணிகளின்‌ வசதிக்காக சென்னை மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ இன்று (13.10.2021) நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன.

Over 24,000 people use Chennai Metro rail since service resumed | Deccan  Herald

நெரிசல்மிகு நேரங்களில்‌ மாலை 05.00 மணி முதல்‌ இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில்‌ இயக்கப்பட்டு வரும்‌ மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ இன்று மட்டும்‌ இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும்‌, இன்று இரவு 10:00 மணி முதல்‌ நள்ளிரவு 12:00 மணி வரை 15 நிமிட இடைவெளியில்‌ மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ இயக்கப்படும்‌ மேற்கண்ட மெட்ரோ இரயில்‌ நீட்டிப்பு சேவைகள்‌ இன்று (13.10.2021) மட்டுமே.

கொரோனா வைரஸ்‌ தொற்றை தடுப்பதற்காகவும்‌ அனைத்து பயணிகளின்‌ பாதுகாப்பான பயணத்திற்காகவும்‌ மெட்ரோ இரயில்‌ நிலையங்களில்‌ நுழைவதற்கும்‌.  மெட்ரோ இரயில்களில்‌ பயணிப்பதற்கும்‌ அனைத்து பயணிகளும்‌ கட்டாயம்‌ சரியாக முகக்கவசம்‌ அணிந்திருப்பதுடன்‌ தனிமனித இடைவெளியைக்‌ கடைபிடித்து பயணம்‌ செய்து சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.